அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான 'டெஸ்லா' தனது 6-வது அனுபவ மையத்தைச் சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இந்த வாரம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான 'டெஸ்லா' இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்த வாரத்தில் தனது புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரைத் திறக்கவுள்ளது. Photograph: (Image Source: @BoyMadras/x) அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான 'டெஸ்லா', இந்தியாவில் தனது விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை இந்த வாரம் திறக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 6-வது மையமாகவும் தென்னிந்தியாவில் 3-வது மையமாகவும் அமையவுள்ள இக்கடையில், 'மாடல் ஒய்' ரக மின்சார கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அமையவுள்ள இந்த மையம், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் 6-வது ஷோரூமாகவும், தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தைத் தொடர்ந்து 3-வது மையமாகவும் திகழவுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஷோரூம் இல்லாத நிலையிலேயே, இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனையில் சுமார் 5 முதல் 7 சதவீதத்தை தமிழ்நாடு வகித்து வந்த சூழலில், புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரின் வருகை விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இதுவரை 600-க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 150 கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 38 டெஸ்லா கார்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் மாநிலத்தில் 19,700-க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் பி.எம்.டபிள்யூ (BMW), மெர்சிடெஸ்-பென்ஸ் (Mercedes-Benz), போர்ஷே (Porsche), வோல்வோ (Volvo) மற்றும் பி.ஒய்.டி (BYD) போன்ற ஆடம்பர ரக நிறுவனங்கள் இணைந்து சுமார் 800 மின்சார சொகுசு கார்களை விற்பனை செய்துள்ளன. தற்போது இந்தியச் சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது புகழ்பெற்ற 'மாடல் ஒய்' (Model Y) மாடலில் இரண்டு விதமான வேரியண்டுகளை விற்பனைக்கு வழங்கி வருகிறது. முதலாவதாக, 'மாடல் ஒய் பிரீமியம் ரியர்-வீல் டிரைவ்' (Model Y Premium RWD) வேரியண்ட் 50.89 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. 5 பேர் பயணிக்கும் வசதி, 2,138 லிட்டர் பூட் ஸ்பேஸ், 5.9 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் மற்றும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் வரை பயணிக்கும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இரண்டாவதாக, அதிக வசதிகள் மற்றும் 3 வரிசைகளில் 6 பேர் அமரும் இருக்கை அமைப்பைக் கொண்ட 'மாடல் ஒய் எல் ஆல்-வீல் டிரைவ்' (Model Y L AWD) வேரியண்ட் 61.99 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 2,539 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதியும், 5 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் அதிவேகத் திறனும் உள்ளது. மேலும், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 681 கி.மீ தூரம் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த இரண்டு மாடல்களையும் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். வீடுகளிலேயே சார்ஜிங் அமைப்புகளை நிறுவுவதற்கான ஆதரவையும் நிறுவனம் வழங்கி வருகிறது. உலகின் முன்னணி சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உச்சக்கட்ட பாதுகாப்பிற்கான சான்றிதழ்களை (Top Safety Ratings) இந்த மாடல்கள் பெற்றுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த பிரீமியம் மின்சார வாகன பிரியர்களிடையே இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடக வலைத்தளமான 'எக்ஸ்' பக்கத்தில் இந்தச் செய்தி தற்போது பெரும் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது. டெஸ்லா சென்னை, டெஸ்லா இந்தியா, மாடல் எல் ஒய் மற்றும் தமிழ்நாடு இ.வி போன்ற முதன்மைச் சொற்கள் ஹேஷ் டேக் மூலம் ஆயிரக்கணக்கான இணையப் பயனர்களும், தொழில்முனைவோர்களும், வாகன ஆர்வலர்களும் இந்த அறிவிப்பைப் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் தனது 6-வது அனுபவ மையத்தைச் சென்னையில் டெஸ்லா நிறுவனம் தொடங்குவது, தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும், மின்சார வாகன உற்பத்தியில் மாநிலம் பெற்றுள்ள முன்னிலைக்கும் சான்றாக அமைந்துள்ளது எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த அனுபவ மையத்தின் வருகையைத் தொடர்ந்து, விரைவிலேயே டெஸ்லா நிறுவனத்தின் பிரம்மாண்ட உற்பத்தி ஆலை தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் நெட்டிசன்கள் தங்களது பதிவுகள் வாயிலாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சென்னையில் தடம்பதிக்கும் டெஸ்லா: விரைவில் பிரம்மாண்ட எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறப்பு: முழு விவரம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk