அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட போதே, மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி மின் கணக்கீட்டாளர் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகத் தனத்தை தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டிருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக, தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும், நடத்துனர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க தவெக இலக்கு நிர்ணயித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் SK27: ராம் குமார் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடக்கம்! “மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது” – மு.வீரபாண்டியன் தனியார் பால் விலை உயர்வு – அன்புமணி கண்டனம்! “நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது!” – மேயர் பிரியா Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – டிடிவி தினகரன் கண்டனம்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk