கட்சி மாறிய 111 எம்.பி., MLA! ADR வெளியிட்ட முக்கிய தகவல்... கட்சி தாவல் தடை சட்டத்தில் மாற்றமா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
கட்சி மாறிய 111 எம்.பி., MLA! ADR வெளியிட்ட முக்கிய தகவல்... கட்சி தாவல் தடை சட்டத்தில் மாற்றமா?

நாட்டில் கட்சி தாவல் அதிகரித்து வருவதை ADR ஆய்வு வெளிப்படுத்துகிறது. 26 லோக்சபா, 7 ராஜ்யசபா எம்.பி.,க்கள், 78 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ள நிலையில், நாகாலாந்து, மேற்கு வங்கம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. செய்தியாளர் : ஐடா அருட்செல்வி கடந்த 2022 முதல் தற்போது வரை, நாட்டில் நடந்த லோக்சபா, ராஜ்யசபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற 111 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளதாக ADR அதாவது ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, 26 லோக்சபா எம்.பி.,க்கள், 7 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் 78 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் கட்சி மாறியவர்கள் மட்டுமின்றி, கட்சி இணைப்பு, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தகுதிநீக்கத்துக்குப் பின் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரை, நாகாலாந்தில் அதிகபட்சமாக 25 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 20 எம்.பி.,க்களும், தெலுங்கானாவில் 9 எம்.எல்.ஏ.,க்களும், கோவாவில் 8 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறியுள்ளனர். பஞ்சாபில் 6 ராஜ்யசபா எம்.பி.,க்களும், மஹாராஷ்டிராவில் 6 எம்.பி.,க்களும் கட்சி மாறியுள்ளனர். மேகாலயாவில் 6, மணிப்பூரில் 5, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் தலா 4, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 2 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறியுள்ளனர். கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சிக்கிம், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒரு எம்.எல்.ஏ.,வும், டில்லியில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் கட்சி மாறியுள்ளனர். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யும் அதிகாரத்தை சபாநாயகர்களிடம் இருந்து மாற்ற வேண்டும் எனவும், எம்.பி.,க்கள் தொடர்பான விவகாரங்களில் ஜனாதிபதிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் விவகாரங்களில் கவர்னர்களுக்கும் இந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் பரிந்துரைத்துள்ளது. மேலும், தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும், கட்சி மாறியவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வரை அரசு அல்லது அமைச்சர் பதவிகளை வகிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை