ஏற்கனவே மின் கணக்கீட்டுக் குளறுபடிகளாலும் தாமதங்களாலும் மின்கட்டணம் அதிகரிப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தனியார் மயமாக்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் நிரந்தர வேலையை எதிர்நோக்கும் இளைஞர்களின் வயிற்றில் அடிப்பதுதான் சமூகநீதியா? தலைவர்கள் ஆவேசக் கேள்வி! தமிழ்நாட்டில் மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ள நிலையில், மின் பயன்பாட்டைக் கணக்கிடும் பணியை அடுத்த 6 மாதங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. மின் கணக்கீட்டாளர் பற்றாக்குறை காரணமாக, இதுவரை ஓய்வுபெற்ற பணியாளர்களைக் கொண்டும், பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கியும் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்ததாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் கணக்கீடு மற்றும் மின் கட்டணம் செலுத்தும் சுழற்சியில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மின் கணக்கீட்டில் ஏற்படும் தாமதம் மற்றும் குளறுபடிகள் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மின் கட்டணம் வருவதாக நுகர்வோரிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, மின் பயன்பாட்டை உடனுக்குடன் துல்லியமாகக் கணக்கிடும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி, புளூடூத் கருவி இதற்காக தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டு, உரிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் மூலம் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. மண்டல அளவில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்வாரியத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அவர்கள் செல்போன் செயலி, ஆப்டிகல் புரோப் மற்றும் புளூடூத் டிரான்ஸ்மிட்டர் உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தி, நுகர்வோரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும். ஒரு பணியாளர் நாளொன்றுக்கு கணக்கிட வேண்டிய மின் இணைப்புகளின் எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு 250 இணைப்புகள்- பிற மாநகராட்சிகளில் 220 இணைப்புகள்- நகராட்சிகளில் 200 இணைப்புகள்- பேரூராட்சிகளில் 180 இணைப்புகள்- கிராமப்புறங்களில் 110 இணைப்புகள்- மலைப்பகுதிகளில் 80 இணைப்புகள் இந்த ஏற்பாடு ஆரம்பத்தில் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தத் திட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ”மின் கணக்கீட்டில் ஏற்படும் தாமதத்திற்குப் போதிய பணியாளர்கள் இல்லாததே காரணம். வாரியத்தில் உள்ள 7,590 கணக்கீட்டாளர் பணியிடங்களில் 5,602 இடங்களும், வருவாய்ப் பிரிவில் 7,119 இடங்களும் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரந்தர முறையில் நிரப்புவதே சரியான தீர்வாகும். நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். மீதித் தொகை தனியார் நிறுவனங்களுக்குச் செல்வது உழைப்புச் சுரண்டலாகும். ஒப்பந்தப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும்.” என்று தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் மின்சார வாரியத்தின் தனியார் மயமாக்கல் முயற்சி மின்கட்டண உயர்வுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் எச்சரித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், 'ஆள் பற்றாக்குறை' என்ற காரணத்தைக் கூறித் தனியார் ஒப்பந்த முறைக்குச் செல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களை முறையான நேரடித் தேர்வுகள் மூலம் அரசே நிரந்தரமாக நிரப்பிட வேண்டும். இதன் மூலமே வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை கிடைப்பதோடு, இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியைக் காக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் நிலைப்பாடு அரசுத் துறையின் பொறுப்பைத் தனியாரிடம் தாரைவார்ப்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே மின் கணக்கீட்டுக் குளறுபடிகளாலும் தாமதங்களாலும் மின்கட்டணம் அதிகரிப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தனியார் மயமாக்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும். தங்களைச் 'சமூகநீதி அரசு' என்று கூறிக்கொள்ளும் தமிழக அரசு, அரசுத் துறைகளில் தற்காலிக ஒப்பந்த முறையை ஊக்குவிப்பது முற்றிலும் முரணானது. காலிப் பணியிடங்களைப் போர்க்கால அடிப்படையில் நிரப்பி, படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்வதே அரசின் முதன்மையான கடமையாகும்” என்று தெரிவித்துள்ளார். மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, வெளிப்படையான முறையில் நிரந்தரப் பணியாளர்களைத் தேர்வு செய்யத் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைவர்கள் ஒருமுகமாக வலியுறுத்தியுள்ளனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மின் மீட்டர் ரீடிங் இனி தனியார் கைகளில்: 'தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான செயல்’: த.வெ.க. அரசுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk