ராமதாஸ் - அன்புமணி இடையே இருந்த மோதல் போக்கு மாறி தற்போது இவருக்கும் இடையில் சமாதானம் ஆகிவிட்ட நிலையில், திலகபாமாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. Photos: திலகபாமா ஃபேஸ்புக் பெண் ஆளுமையாய் மாற விரும்பாத ஆண்கள், பெண்களுக்கு இடையில் சண்டையை மூட்டிவிட்டு அதில் குளிர்காய்கிறார்கள். இந்த சதி குடும்பத்தில் தொடங்கி அரசியல் வரை நீள்கிறது என்று பா.ம.க. திலகபாமா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது, பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளில் முக்கியமானவர் திலகபாமா. அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட இவர், 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் என்.டி.ஏ கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக களமிறங்கினார். பா.ம.க.வின் பொருளாரான இவர், தேர்தல் சமயத்தில் த.வெ.க தலைவர் விஜய்யை எதிர்த்து தீவிரமான பரபரப்புரையில் ஈடுபட்டார். அதே சமயம், தேர்தல் முடிவுகள் வெளியானபோது விஜய் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க.வின் ஆர்.டி.சேகர் 2-வது இடம் பிடித்தார். திலகபாமா 4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடம் பிடித்தார். இதனிடையே தேர்தலுக்கு முன்பாக பா.ம.க.வில் மருத்துவர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு அதிகமாக இருந்தது. இதனால் பா.ம.க. வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் வேட்பாளர்கள் களமிறங்கினர் பெரம்பூர் தொகுதியில் திலகபாமா அன்புமணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிவில், பா.ம.க 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி இடையே இருந்த மோதல் போக்கு மாறி தற்போது இவருக்கும் இடையில் சமாதானம் ஆகிவிட்ட நிலையில், திலகபாமாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் பா.ம.க.வில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே திலகபாமா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவள் ஆளுமையாய் மாறுவதை விரும்பாத ஆண்கள், பெண்களுக்கிடையே சண்டையை மூட்டிவிட்டு, அதில் குளிர்காய்ந்து கொள்கிறார்கள். இந்தச் சதி குடும்பத்திலிருந்து தொடங்கி, அரசியல் வரை நீள்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'அவள் ஆளுமையாய் மாறுவதை விரும்பாத ஆண்கள், இப்படி பெண்கள் இடையே சண்டை மூட்டி விடுகிறார்கள்': யாரை சொல்கிறார் பா.ம.க திலகபாமா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk