டெல்லியில் எஸ்ஐஆர்: அத்வானி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
டெல்லியில் எஸ்ஐஆர்: அத்வானி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் ஏன்?

பட மூலாதாரம், Getty Images டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த (Special Intensive Revision - SIR) பணியின்போது, தேர்தல் அதிகாரிகளால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாக்காளர்களின் பட்டியலில் பல முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவர்களில் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் அடங்குவர். பிடிஐ (PTI) செய்தி நிறுவன தகவலின்படி, தில்லியில் சுமார் 33.13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. பெரும்பாலான இந்த வழக்குகளுக்கு 2002-ம் ஆண்டு நடத்தப்பட்ட முந்தைய சிறப்பு தீவிரத் திருத்தப் பட்டியலுடன் தற்போதைய வாக்காளர் பதிவுகளை இணைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோ அல்லது விவரங்களில் முரண்பாடுகள் இருந்ததோ காரணமாகும். இருப்பினும், நோட்டீஸ் பெறுவது என்பது வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படும் என்பதைக் குறிக்காது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆணையத்தின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட வாக்காளர் தனது பதிலையும் அவசியமான ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம்; உரிய விசாரணை மற்றும் முறையான உத்தரவு இல்லாமல் யாருடைய பெயரும் நீக்கப்படாது. நோட்டீஸ் பெற்ற முக்கியப் பிரமுகர்கள் யார், அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்துக் கீழே விரிவாகப் பார்க்கலாம். பட மூலாதாரம், ANI முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி மற்றும் அவரது குடும்பத்தின் பல உறுப்பினர்களின் பதிவுகளும் சிறப்பு தீவிரத் திருத்தப் (SIR) பட்டியலுடன் பொருந்தவில்லை. முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, அவரது மகள் பிரதிபா அத்வானி மற்றும் மருமகள் கீதிகா அத்வானி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது பிடிஐ (PTI) தகவலின்படி, இந்த மூன்று பேரின் பெயர்களும் 2002-ம் ஆண்டின் சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. அதேசமயம், அத்வானியின் மகன் ஜெயந்த் அத்வானியின் பதிவு மேப்பிங் (mapping) செயல்முறையின்போது வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது. அத்வானி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் ஆவர். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஆகியோருக்கும் நோட்டீஸ் வந்துள்ளன. அவர்கள் இருவரின் பதிவுகளும் "கடைசி சிறப்பு தீவிரத் திருத்தப் பட்டியலுடன் இணைக்கப்படவில்லை" என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, முந்தைய சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் அவர்களது தற்போதைய வாக்காளர் பதிவுகளை இணைக்க முடியவில்லை. இருவரும் புதுடெல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுனாரி பாக் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆவர். பட மூலாதாரம், ANI டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பிடிஐ (PTI) தகவலின்படி, கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரின் பெயர்களும் முந்தைய சிறப்பு தீவிரத் திருத்தப் பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகன் மற்றும் பெற்றோர் ஆகியோரும் இந்தப் பிரிவின் கீழ் நோட்டீஸ் பெற்றவர்களில் அடங்குவர். அதிகாரிகளின் கூற்றுப்படி, முந்தைய வாக்காளர் பட்டியலுடன் தொடர்புபடுத்த தேவையான, போதுமான தகவல்கள் அவரது கணக்கெடுப்புப் படிவத்தில் இடம்பெறவில்லை. பட மூலாதாரம், ANI டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு அவரது வாக்காளர் விவரங்களில் வயது தொடர்பான முரண்பாடு இருந்ததால் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவரது ஆவணங்களையும் தகவல்களையும் சரிபார்த்த பிறகு அவரது பெயர் சரியானது என்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் பின்னர் தெரிவித்தது. நவம்பர் 4, 2026 அன்று வெளியிடப்பட உள்ள AC-14 (சாலிமார் பாக்) தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்த்துக்கொள்ளப்படும். பட மூலாதாரம், ANI மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் மற்றும் அவரது மனைவி பிரமிளா சிபல் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிடிஐ தகவலின்படி, அவர்கள் இருவரின் பெயர்களும் "கடைசி சிறப்பு தீவிரத் திருத்தப் பட்டியலுடன் இணைக்கப்படாதவை" என்ற பிரிவின் கீழ் உள்ளன. அதாவது, முந்தைய சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் அவர்களது தற்போதைய பதிவை இணைக்க முடியவில்லை. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தன்கருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பிடிஐ தகவலின்படி, அவரது வாக்காளர் பதிவில் உள்ள தகவல்களை முந்தைய சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதில் முரண்பாடு கண்டறியப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற முக்கியப் பிரமுகர்களின் பட்டியலில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பிடிஐ தகவலின்படி, அவரது பதிவும் "கடைசி சிறப்பு தீவிரத் திருத்தப் பட்டியலுடன் இணைக்கப்படாதவை" என்ற பிரிவிலேயே உள்ளது. அதாவது, அவரது தற்போதைய வாக்காளர் பதிவை முந்தைய சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் இணைக்க முடியவில்லை. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு செப்டம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு வகையான வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக டெல்லியின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். முதல் பிரிவில், முந்தைய தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியலுடன் பதிவுகள் இணைக்கப்படாத வாக்காளர்கள் அடங்குவர். இரண்டாவது பிரிவில், இணைப்பதற்கான விவரங்களில் தர்க்கரீதியான முரண்பாடுகள் (logical discrepancies) உள்ள வாக்காளர்கள் அடங்குவர். இவை முறைமை மூலமாகத் தானாக உருவாக்கப்பட்ட (system-generated) நோட்டீஸ்கள் என்றும், தரவுகளைத் திருத்துவதற்காகவே இவை வழங்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. நோட்டீஸ் வழங்குவது என்பது வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று அர்த்தமல்ல. ஆணையத்தின் கூற்றுப்படி, நோட்டீஸ் பெறும் வாக்காளர்கள் தங்கள் பதிலையும் தேவையான ஆவணங்களையும் தொடர்புடைய தேர்தல் பதிவு அதிகாரியிடமோ அல்லது வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமோ சமர்ப்பிக்கலாம். விசாரணைக்கான வாய்ப்பு வழங்கப்படாமலும், முறையான உத்தரவு பிறப்பிக்கப்படாமலும் எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை