தூக்கி எறியப்படும் பாலிஎதிலின் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து 200 டிகிரி செல்சியஸு-க்கும் குறைவான வெப்பநிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இணையான எரிபொருட்களைத் தயாரிக்கும் எளிய முறையை அமெரிக்க ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சந்தையில் எளிதில் கிடைக்கக்கூடிய அலுமினியம் சார்ந்த உருக்கிய உப்புக்களைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே மேற்கொள்ளப்படும் இந்த வேதிவினை, கழிவு மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மாற்றாக, அவற்றை உயர் மதிப்புமிக்க பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் 'ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக' விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சந்தையில் எளிதில் கிடைக்கக்கூடிய அலுமினியம் சார்ந்த உருக்கிய உப்புக்களைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே மேற்கொள்ளப்படும் இந்த வேதிவினை, கழிவு மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இணையான எரிபொருட்களைத் தயாரிக்கும் எளிய மற்றும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் உள்ள 'ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின்' (Oak Ridge National Laboratory - ORNL) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சந்தையில் எளிதில் கிடைக்கக்கூடிய அலுமினியம் சார்ந்த உருக்கிய உப்புக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த முறையின் மூலம் சுமார் 60 சதவீத பெட்ரோலை உற்பத்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் புதிய விடிவுகாலம் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், காய்கறி வெட்டும் பிளாஸ்டிக் பலகைகள் போன்றவற்றில் 'பாலிஎதிலின்' என்ற வேதிப்பொருள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை எளிதில் மக்காமல் கழிவுகளாகச் சேர்ந்து சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், இந்த பாலிஎதிலின் பிளாஸ்டிக்கை அலுமினியம் குளோரைடு அடங்கிய உருக்கிய உப்புக்களுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம், பிளாஸ்டிக்கின் நீண்ட மூலக்கூறு சங்கிலிகளை உடைத்து சிறிய ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளாக விஞ்ஞானிகள் மாற்றியுள்ளனர். அமெரிக்க வேதியியல் கழகத்தின் இதழில் (Journal of the American Chemical Society) வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையின் தொழில்நுட்பத்திற்காக ஆய்வாளர்கள் காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளனர். 200 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மாற்றம் பாரம்பரியமாக பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் முறைகளில் விலையுயர்ந்த பிளாட்டினம் போன்ற அரிதான உலோகங்கள், கரிமக் கரைப்பான்கள் அல்லது வெளிப்புற ஹைட்ரஜன் வாயு ஆகியவை பெருமளவில் தேவைப்படும். ஆனால், இந்த புதிய முறையில் இவை எதுவும் தேவையில்லை என்பதுடன், 200 டிகிரி செல்சியஸிற்கும் குறைவான ஒப்பீட்டளவில் மிதமான வெப்பநிலையிலேயே இந்த வேதி மாற்றம் சாத்தியமாகிறது. இது குறித்து ஆய்வின் இணை ஆசிரியரும் ஆய்வக விஞ்ஞானியுமான ஜென்ஜென் யாங் (Zhenzhen Yang) கூறுகையில், "எந்தவொரு கூடுதல் தூண்டுதலோ அல்லது கரைப்பானோ இன்றி, 200 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலையில் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து உயர் மதிப்புமிக்க வேதிப்பொருட்களை உருவாக்க உருக்கிய உப்புக்கள் ஊடகமாகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்" எனத் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வாறு கிடைக்கிறது? எக்ஸ்-ரே நிறமாலை காட்டி மற்றும் அணுக்கரு காந்த அதிர்வு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த வேதி வினையை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணித்தனர். இதில், எளிமையான மூலக்கூறு அமைப்பைக் கொண்ட பாலிஎதிலின் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற எரிபொருளாகவும், சற்றே சிக்கலான மூலக்கூறு அமைப்பைக் கொண்ட பிளாஸ்டிக் டீசல் போன்ற எரிபொருளாகவும் மாறுவது கண்டறியப்பட்டது. டென்னசி பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டப் பிந்தைய ஆய்வாளர் லிகி சியூ மற்றும் மூத்த விஞ்ஞானி ஷெங் டாய் தலைமையிலான குழுவினர் இந்த சோதனைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். இக்கண்டுபிடிப்பு ஆய்வக அளவைத் தாண்டி தொழிற்துறை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நாட்டின் ஆற்றல் பாதுகாப்பிற்கும், கழிவு மேலாண்மைக்கும் பெரும் பங்காற்றும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட சவால் இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் அலுமினியம் சார்ந்த உப்புக்கள் விலை மலிவானதாகவும், அதிக வேதிவினைத் திறன் கொண்டதாகவும் இருந்தாலும், அவை காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மையுடையவை. இதனால் அவற்றின் ஸ்திரத்தன்மை குறைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த உப்புக்களின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் வகையில், ஹாலோஜன்கள் அல்லது கார்பன் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக மறுசுழற்சி செய்வது என்பது குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளில் விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பிளாஸ்டிக் கழிவுகளுக்குப் புதிய தீர்வு: தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கில் பெட்ரோல், டீசல்; அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk