சமூக நல விடுதிகளில் மாட்டு இறைச்சி வழங்குவது உணவு உரிமை என்று கூறப்பட்டால், பன்றி இறைச்சி உண்ணும் மாணவர்களின் உரிமையையும் மதித்து அதையும் உணவில் சேர்க்க முன் வர வேண்டும் என்று இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்து உள்ளார். கோவை, குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் மறைந்த சசிகுமாரின் 10-ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். வாங்கும் போது வெறும் ரூ.1,400 தான்; விற்கும் போது ரூ.2 கோடி: சில்வர் சங்கிலிக்கு வந்த வாழ்வு இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான இந்து அமைப்பின் நிர்வாகிகளும், காவல்துறை அதிகாரிகளும் பயங்கரவாத அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். சசிகுமார் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையிலும், வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. காவலர் செல்வராஜ் படுகொலை வழக்கு நீர்த்துப்போய் விட்டது, எஸ்.ஐ. வில்சன் வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உடனடியாகக் கிடைக்காததாலேயே இதுபோன்ற வன்முறை மனநிலை தொடர்ந்து நீடிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 'பாரத் மாதா கி ஜெ' என முழக்கமிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவமே இதற்குச் சான்று கோவை குண்டுவெடிப்பில் பலியான 58 பேரின் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இன்னமும் ஆறாத வடுவாகவே இந்த வேதனை நீடிக்கிறது.பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராகவே இந்த நினைவேந்தல் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்து சமுதாயத்தில் உள்ள ஜாதி பாகுபாடுகளையும், ஏழை- பணக்காரன் என்ற வேற்றுமைகளையும் களைவதற்காகவே மறைந்த ராமகோபாலன் ஐயா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்தார். அனைவரும் இந்து என்ற உணர்வோடு ஒன்றிணையவே இவ்விழாக்கள் நடத்தப்படுகின்றன. சமூக நல விடுதிகளில் மாட்டு இறைச்சி வழங்குவது உணவு உரிமை என்று கூறப்பட்டால், பன்றி இறைச்சி உண்ணும் மாணவர்களின் உரிமையையும் மதித்து அதையும் உணவில் சேர்க்க முன் வர வேண்டும்” என்றார் இந்நிகழ்ச்சியில் இந்து மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச் செயலாளர் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர்கள் ஜெய்சங்கர், ஆறுச்சாமி, மகேஸ்வரன், போத்தனூர் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன், வேடப்பட்டி ஆனந்த் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவட்ட, நகர மற்றும் பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர் Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மாட்டுக்கறி உரிமை என்றால் பன்றிக் கறியையும் மெனுவில் சேருங்கள்; வன்னியரசுக்கு இந்து முன்னணி பதிலடி
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk