கடந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் துறையூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிசங்கர். அதன்பிறகு, தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் துறையூர் பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த துணை சபாநாயகர்: தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் பேனரால் பரபரப்பு திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் சட்டமன்ற துணை சபாநாயகருமான மு. ரவிசங்கர், தனது வீட்டுக்கு பொதுமக்கள் நேரடியாக வர வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் பேனர் வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், துறையூர் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிசங்கர். அதனைத் தொடர்ந்து, அவர் தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, "பொதுமக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் நேரடியாக வந்து சந்திக்கலாம்" என்று அவர் வாக்குத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அதற்கு மாறாக வெளியாகியுள்ள அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேனர் வைக்கப்பட்ட பின்னணி என்ன? துறையூர் எம்.எல்.ஏ.-வாக ரவிசங்கர் விளங்கினாலும், அவரது இல்லம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம், சக்தி நகரில் அமைந்துள்ளது. அதே பகுதியில் அவரது கட்சி அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், இவரது வீடு மற்றும் அலுவலகப் பகுதியில் திடீரென வைக்கப்பட்ட அந்த பேனரில், "தன்னை நேரில் சந்திக்க விரும்புவோர் துறையூரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அல்லது மண்ணச்சநல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும்" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இனி பொதுமக்கள் யாரும் அவரது வீட்டுக்கு நேரடியாக வரக்கூடாது என்ற தடை உத்தரவு போல இது அமைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். துணை சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் சில தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரவிசங்கரின் குடும்ப வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி வந்தாலும், அவற்றுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. இருப்பினும், த.வெ.க உள்வட்டாரத் தகவலின்படி, தனிப்பட்ட குடும்பக் குழப்பங்களால் தேவையற்ற பிரச்னைகள் எழாமல் இருக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாகக் சொந்தக் கட்சி நிர்வாகிகள்கூட அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பேசப்படுகிறது. வாக்களித்த மக்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறிவிட்டு, தற்போது வீட்டு வாசலில் பேனர் வைக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து ரவிசங்கர் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காதது துறையூர் மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. க. சண்முகவடிவேல் Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அலுவலகத்தில் மட்டும் தான் சந்திப்பு: துணை சபாநாயகர் பேனரால் பரபரப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk