2000 ஆண்டுகள் பழமை; சுனாமியால் அழிந்த சோழ நகரம்: பூம்புகார் அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
2000 ஆண்டுகள் பழமை; சுனாமியால் அழிந்த சோழ நகரம்: பூம்புகார் அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு

பானை ஓடுகளின் துண்டுகளுக்கு இடையே 'ரவுலட்டட்' (rouletted ware) வகை மட்பாண்டங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; மேலும் இவை குறித்து விரிவான ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 2,000 ஆண்டுகள் பழமையான துறைமுக நகரமான பூம்புகார், ஆரம்பகாலச் சோழர்களால் கட்டப்பட்டு, ஆழிப்பேரலைகளால் (சுனாமி) அழிந்துபோன தன் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சான்றுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், வங்காள விரிகுடாவில், இன்றைய கடலோரப் பகுதியிலிருந்து 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இரு வாரங்கள் நடத்தப்பட்ட நீருக்கடியிலான அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வுக்குப் பிறகு, தமிழ்நாடு தொல்லியல் துறை குழுவினர் 200-க்கும் மேற்பட்ட பானை ஓடுகளையும், கட்டட அமைப்புகளின் படங்களையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன் தலைமையில் 3 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், கிடைத்த பொருட்கள் அனைத்தும், மேலை ஆசிய நாடுகளுடன் இந்தப்பகுதி கொண்டிருந்த வணிகத் தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. 1981-ஆம் ஆண்டு முதல் நீருக்கடியில் பூம்புகார் குறிதது ஆராயப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த கட்ட ஆய்வில்தான் முதன்முறையாக பாரசீக வளைகுடா வணிக வலைப்பின்னலுடன் தொடர்புடைய நீண்ட, குறுகிய போக்குவரத்துப் பாத்திரங்களான "டார்பிடோ ஜாடிகள்" (torpedo jars) கண்டறியப்பட்டுள்ளன. இவை ஒயின் மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்தைக் குறிக்கின்றன. புதிதாகக் கண்டறியப்பட்ட பொருட்களில் மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்களும் அடங்கும்; இவை பழங்கால ஈரானுடன் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. துடுப்பு முத்திரை பதித்த மண்பாண்டங்கள் (Paddle-impressed pottery), கங்கைச் சமவெளியுடனான வணிகத் தொடர்பைப் புலப்படுத்துகின்றன. இதேபோன்ற டார்பிடோ ஜாடிகளின் துண்டுகள் முசிறி போன்ற பிற பழங்காலத் துறைமுகங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது, பழங்காலக் காவிரிப்பூம்பட்டினம் (காவிரிப்பட்டினம்) (பூம்புகாரின் பிற பெயர்கள்) மேலை ஆசிய நாடுகளுடன் மிகச்சிறந்த தொடர்பைக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார். மாநில தொல்லியல் துறையின் இணை இயக்குநர் வி. பி.யதீஸ் குமார் கூறும்போது, "ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பௌத்த கலைப்பொருட்களுடன் தொடர்புடைய சுண்ணக்கற்களையும் (limestone) நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார். இந்த பானை ஓடுகளின் துண்டுகளுக்கு இடையே 'ரவுலட்டட்' (rouletted ware) வகை மட்பாண்டங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; மேலும் இவை குறித்து விரிவான ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். நீருக்கடியில் 40 மீ x 16 மீ அளவிலான நீள்வட்ட அமைப்பு 1991-ஆம் ஆண்டில், கடற்கரையிலிருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில், 23 மீ ஆழத்தில் யு (U)-வடிவ அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர். பின்னர், அந்த அமைப்பு 40 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவம் கொண்டது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்தக் கட்டட எச்சங்கள் மணல் படிவுகளாலும் மீன்பிடி வலைகளாலும் மூடப்பட்டு, ஒரு இயற்கை அமைப்பைப் போலத் தோற்றமளித்தன. கடற்படுகையிலிருந்து 2.5 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்ட இந்த அமைப்பு, கற்பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. பழைய நகரத்திற்கு என்ன நேர்ந்தது? கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நகரத்தின் சில பகுதிகள் கடல் அரிப்பு காரணமாக நீரில் மூழ்கியிருக்கலாம் எனத் தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். பூம்புகாருக்கு அருகில் உள்ள வானகிரியில் 1991 வரை பயன்பாட்டில் இருந்து, தற்போது கடலுக்குள் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவிலை இதற்குச் சான்றாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பூம்புகாரில் பழங்கால ஆழிப்பேரலை குறித்த ஆய்வை நடத்திய புவியியலாளர்கள், கடந்த 2,000 ஆண்டுகளில் இப்பகுதி பல ஆழிப்பேரலைகளைக் கண்டுள்ளதாகக் கூறுகின்றனர். தமிழ் காப்பியங்களான 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை' ஆகியவற்றிலும், கிரேக்கோ-ரோமானிய ஆவணங்களான 'பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரியன் சீ' (Periplus of the Erythraean Sea) மற்றும் தாலமியின் 'ஜியோகிராஃபி' (Geography) ஆகியவற்றிலும் இது காவிரிப்பட்டினம் மற்றும் கபோரிஸ் எம்போரியம் (Kaboris Emporium) என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை