சக்கரமும் இல்ல, கால்களும் இல்ல; நிலவின் இருண்ட பள்ளங்களில் உருண்டோடும் விசித்திர ரோபோ

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
சக்கரமும் இல்ல, கால்களும் இல்ல; நிலவின் இருண்ட பள்ளங்களில் உருண்டோடும் விசித்திர ரோபோ

நிலவின் இருண்ட, செங்குத்தான பள்ளங்களில் சக்கரங்கள் இல்லாமலேயே உருண்டு சென்று ஆய்வு செய்வதற்காக டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 'ரோபோபால் III' எனும் பந்து வடிவ ரோபோ உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் உள்ள ஆழமான, சூரிய வெளிச்சமே படாத இருண்ட பள்ளங்களில் (Permanently Shadowed Regions) ஆய்வு மேற்கொள்வது விண்வெளி விஞ்ஞானிகளுக்கு எப்போதும் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. செங்குத்தான சரிவுகளும், கரடுமுரடான பாறைகளும் நிறைந்த இந்தப் பகுதிகளில் வழக்கமான சக்கரங்கள் கொண்ட ரோவர்கள் செல்வது கடினம். அவை கவிழ்ந்து விடவோ அல்லது மணலில் சிக்கிக் கொள்ளவோ அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் (Texas A&M) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 'ரோபோபால் III' (RoboBall III) என்ற விசித்திரமான ரோபோவை உருவாக்கியுள்ளனர். சக்கரங்களும் இல்லை, கால்களும் இல்லை!பார்ப்பதற்கு ஒரு பெரிய நெகிழிப் பந்து (Inflatable Ball) போலக் காட்சியளிக்கும் இந்த ரோபோவிற்குச் சக்கரங்களோ அல்லது கால்களோ கிடையாது. இது நிலவின் செங்குத்தான சரிவுகளில் உருண்டு சென்று ஆய்வு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உருண்டை வடிவப் பொருளுக்கு "மேல்-கீழ்" என்ற திசை வேறுபாடு இல்லாததால், இது எந்தப் பக்கத்தில் விழுந்தாலும் கவிழ்ந்துவிடும் என்ற பயம் இல்லை. டெக்சாஸில் உள்ள ஒரு சகதி நிறைந்த பாறை குவாரியில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், இந்த ரோபோ பாறைகளின் மீது எகிறிக் குதித்தும், கரடுமுரடான நிலப்பரப்பில் தடையின்றி உருண்டாடியும் தன் திறனை நிருபித்துள்ளது. இது எப்படி இயங்குகிறது?இந்த ரோபோவின் இயக்கத்திற்குப் பின்னால் ஒரு எளிய இயற்பியல் சூட்சுமம் உள்ளது. ரோபோவின் காற்று நிரப்பப்பட்ட வெளிப்புறக் கூாட்டிற்குள் ஒரு 'பெண்டுலம்' (ஊசல்) பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெண்டுலத்தை முன்னோக்கி நகர்த்தும்போது, ரோபோவின் ஈர்ப்பு மையம் மாறி அது முன்னோக்கி உருளத் தொடங்குகிறது. பக்கவாட்டில் நகர்த்தும்போது திசையை மாற்றுகிறது. சரிவுகளில் வேகமாக உருளாமல் தடுக்க, பெண்டுலத்தை மேல்நோக்கிய திசையில் நிறுத்தி வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த முழு அமைப்பும் இரண்டு முக்கிய இயக்கிகள் (Actuators) மூலம் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. அனைத்து இயந்திர பாகங்களும் முழுமையாக மூடப்பட்ட பந்தின் உட்புறத்திலேயே இருப்பதால், நிலவின் நுண்ணிய தூசி துகள்களால் இயந்திர பாகங்கள் பழுதடையும் அபாயம் இதில் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. ஆய்வுத் திட்டம் என்ன?சுமார் 6 அடி விட்டமும் 150 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோவால் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேமராக்கள் மற்றும் ஆய்வுக்கருவிகளைச் சுமந்து செல்ல முடியும். திட்டப்படி, ஒரு பெரிய பாரம்பரிய ரோவர் இந்த ரோபோபாலை நிலவின் 'ஷேக்கிள்டன்' (Shackleton) போன்ற ஆழமான பள்ளங்களின் விளிம்பு வரை கொண்டு செல்லும். அங்கிருந்து ரோபோபால் சரிவில் உருட்டி விடப்படும். பள்ளத்தின் அடிவாரத்தை அடையும் ரோபோ, அங்குள்ள உறைந்த நீர் மற்றும் பிற தாதுப் பொருட்களைச் சேகரிக்கும். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஒரு சிறிய ராக்கெட் கொள்கலன் மூலம் மீண்டும் மேலே உள்ள ரோவருக்கு அனுப்பி வைக்கப்படும். எஞ்சியுள்ள சவால்கள்பூமியில் நடத்தப்பட்ட சோதனைகளில் 20 டிகிரி சரிவுகளை வெற்றிகரமாகக் கடந்திருந்தாலும், நிலவின் கடுமையான சூழலை எதிர்கொள்ள இந்த ரோபோ இன்னும் தங்களை முழுமையாகத் தயார்படுத்த வேண்டியுள்ளது. நிலவின் இருண்ட பகுதிகளில் நிலவும் மைனஸ் 184 டிகிரி செல்சியஸை விடக் குறைவான கடும் குளிர், கூர்மையான பாறைகள் மற்றும் விண்வெளி கதிர்வீச்சுகளைத் தாங்கும் வகையில் இதன் எலக்ட்ரானிக் பாகங்களை மேம்படுத்த வேண்டும். மேலும், பந்தின் உட்புறம் முழுமையாக மூடப்பட்டிருப்பதால், ஏதேனும் ஒரு சிறிய மோட்டார் பழுதடைந்தால் கூட முழு ரோபோவையும் பிரித்துத்தான் சரிசெய்ய முடியும் என்பது இதிலுள்ள ஒரு பின்னடைவு. இருப்பினும், கடினமான விண்வெளி மண்டலங்களை ஆராய்வதற்கு ஆடம்பரமான சக்கரங்களை விட, எளிய உருண்டை வடிவமே சிறந்த வழியைத் தரும் என்ற புதிய கோணத்தில் இந்த 'ரோபோபால் III' விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Kalaiyarasi Sundharam S serves as a Sub-Editor at The Indian Express (Tamil). Known for her precision in news editing and a profound understanding of digital media, she has over 4 years of experience in the Tamil media industry. She has established herself as a versatile journalist skilled in news gathering and digital storytelling. Professional Experience and Leadership: Kalaiyarasi has worked with several of Tamil Nadu's leading news organizations: The Indian Express (Tamil): Since joining as a Sub-Editor in November 2024, she has played a key role in delivering accurate and real-time news to digital audiences. Leading Tamil News Outlets: Prior to this, she honed her skills in fast-paced news environments by working with premier organizations such as News7 Tamil, Anandha Vikatan, and Polimer News even during her college years. Expertise and Editorial Philosophy: Kalaiyarasi specializes in simplifying complex topics, particularly in the Food and Health sectors. Her unique strength lies in writing content that is easily accessible to common readers.Her primary areas of interest include: Politics and Society: Monitoring key political shifts and social changes in India and Tamil Nadu. She possesses the skill to translate current political happenings into timely news reports. Food and Health: Providing authoritative insights on food recipes, healthy diets, and medical tips, including investigative articles. Education and Credibility: With a strong academic background, she holds a Master’s degree (P.G.) in Journalism and Mass Communication from the renowned Periyar University. She is deeply passionate about identifying unique perspectives in daily news and popularizing information regarding food and health among Tamil readers. Industry Experience at a Glance: Years of Experience: 4+ Education: Post Graduate (P.G.), Periyar University Previous Organizations: News7 Tamil, Anandha Vikatan, Polimer News. Contact: You can share your feedback at Kalaiyarasi.sundharam@indianexpress.com. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை