குளியலறையில் நடந்த ரகசிய சந்திப்பு - இரானில் பிரிட்டனுக்காக உளவு பார்த்த சோவியத் அதிகாரியின் கதை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
குளியலறையில் நடந்த ரகசிய சந்திப்பு - இரானில் பிரிட்டனுக்காக உளவு பார்த்த சோவியத் அதிகாரியின் கதை

பட மூலாதாரம், Courtesy of Ian McCredie இரண்டு உளவுத்துறை அதிகாரிகள். ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். இருவரும் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் சிறிய குளியலறையில் அமர்ந்திருக்கின்றனர். தங்களது குரல்கள் வெளியில் கேட்காத வகையில், குழாயைத் திறந்துவிட்டதுடன், ரேடியோவையும் இயக்கி வைத்துள்ளனர். அந்த வீட்டில் இரான் பாதுகாப்புப் படையினர் உளவு சாதனங்களை பொருத்தியிருக்கலாம் என்று எம்ஐ6 அதிகாரி சந்தேகிக்கிறார். 1981-ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற இந்தச் சம்பவத்துடன் பென் மெக்கின்டையர் தனது புதிய புத்தகத்தைத் தொடங்குகிறார். ரஷ்யாவைச் சேர்ந்த விருந்தினர் விளாடிமிர் குஜிச்கின் முன்னாள் கேஜிபி அதிகாரி. பிரிட்டனின் எம்ஐ6 அமைப்புக்காக உளவாளியாகப் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். சிறிது காலத்துக்குப் பிறகு இரானில் இருந்து நாடு கடத்தப்பட்டு, பிரிட்டனில் குடியேற முடியும் என்று அவர் நம்புகிறார். இந்தச் சந்திப்பின்போது, அவர் மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். மேற்கத்திய நாடுகளில் உள்ள மருத்துவர்களால் தனது பாலியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும், அதன் மூலம் தனது திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும் என்றும் குஜிச்ச்கின் நம்பியதாக மெக்கின்டையர் கூறுகிறார். பனிப்போர் காலத்தின் மிகவும் சிக்கலான உளவு நடவடிக்கைகளில் ஒன்றின் தொடக்கமாக இந்தச் சம்பவம் அமைந்தது. பிரிட்டிஷ் எழுத்தாளர் பென் மெக்கின்டையர், 'ரெட்வுட்: பனிப்போரின் மிகவும் குறிப்பிடத்தக்க உளவாளியின் சொல்லப்படாத கதை'என்ற தனது புத்தகத்தில் இந்தச் சம்பவத்தை விவரித்துள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது 'ரெட்வுட்' புத்தகம், பிரிட்டனுக்காக உளவாளியாக குஜிச்கின் தேர்வு செய்யப்பட்டதில் தொடங்கி, தெஹ்ரானில் அவர் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகள், பசர்கான் எல்லை வழியாக அவர் தப்பிச் சென்றது வரை நடந்தவற்றை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. ஆனால், இந்தச் சம்பவத்தின் முக்கியத்துவம் ஒரு கேஜிபி அதிகாரியின் கதையுடன் மட்டும் முடிவடையவில்லை. சோவியத் யூனியனுக்கும் துதே கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்த குஜிச்கினின் தகவல்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா வழியாக இரான் அதிகாரிகளுக்குச் சென்றதாக மெக்கின்டையரின் புதிய புத்தகம் கூறுகிறது. இந்தத் தகவல்கள், 1982 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் துதே கட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒடுக்குமுறைக்கு வழிவகுக்க உதவியதாக அந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. துதே கட்சியும் சோவியத் யூனியனும் உண்மையில் இரானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தனவா? என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, இன்னும் சர்ச்சைக்குரிய கேள்வியை இந்தப் புத்தகம் எழுப்புகிறது. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு விளாடிமிர் குஜிச்கின் 1947-ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிறந்தார். அவரது மாற்றாந்தந்தையான ஆண்ட்ரே குஜிச்ச்கின், கேஜிபி அதிகாரியாக இருந்தார். தனது 22 வயது வரை ஆண்ட்ரேதான் தனது உண்மையான தந்தை என்று விளாடிமிர் நம்பினார். அப்போது, அவரது உண்மையான தந்தையான ஜார்ஜி அலெக்சாண்ட்ரோவிச் லார்கின் ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் சிவில் இன்ஜினியராக இருந்தார். விளாடிமிர் அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை. விளாடிமிரின் தாயான எலிசவெட்டாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, ஆண்ட்ரே விளாடிமிரை தத்தெடுத்தார். குஜிச்கின் மாஸ்கோவில் உள்ள ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான நிறுவனத்தில் பாரசீக மொழியைப் படித்தார். 1973ஆம் கல்வியாண்டில் இரானில் உள்ள பஃக் தொழில்துறை திட்டத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பயிற்சியை முடித்த பிறகு, கேஜிபியின் 'எஸ் துறை'யில் சேர்ந்தார். 'சட்டவிரோத முகவர்கள்' (illegal agents) என்று அழைக்கப்பட்ட உளவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது இந்தத் துறையின் பொறுப்பாக இருந்தது. இந்த உளவாளிகள் வெளிநாடுகளில் வசித்து, பெரும்பாலும் போலி அடையாளங்களுடன் ரகசியமாகப் பணியாற்றினர். அவர்களுக்கு தூதரக ரீதியான அங்கீகாரமோ பாதுகாப்போ இருக்காது. 1977-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி, தூதரக அதிகாரி என்ற போலி அடையாளத்தில் குஜிச்கின் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில், 'லைன் என் ' என்றழைக்கப்பட்ட ஒரு பிரிவில் 'ஆதரவு அதிகாரியாக' பணியாற்றினார். இரான் மற்றும் அண்டை நாடுகளில் கேஜிபி-க்காக ரகசியமாகப் பணியாற்றிய முகவர்களின் வலையமைப்பை இந்தப் பிரிவு நிர்வகித்து வந்தது. 1980களின் நடுப்பகுதியில், இந்தப் பிரிவின் தலைவரான விளாடிமிர் கோலோவனோவ் மாஸ்கோவுக்கு திரும்ப அழைக்கப்பட்டார். அதன்பிறகு குஜிச்ச்கின் 'லைன் என் ' பிரிவுக்குப் பொறுப்பேற்றார். அதே நேரத்தில், அவருக்கு அதிகாரப்பூர்வமாக 'துணைத் தூதர்' பதவியும் வழங்கப்பட்டது. தெஹ்ரானில் மிஷெல் மற்றும் உர்சுலா கெஷ்விண்ட் என்ற போலிப் பெயர்களில் வசித்து வந்த தம்பதியைக் கண்காணிப்பது அவரது முக்கியப் பணிகளில் ஒன்றாக இருந்தது. அந்தத் தம்பதி விருந்துகள் மற்றும் தூதரக நிகழ்வுகளுக்குச் சென்று, இரானில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் அதிகாரிகள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். பட மூலாதாரம், Courtesy of Elena Alexandrovna புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான உளவு நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக தெஹ்ரான் இருந்தது. சிஐஏ மற்றும் எம்ஐ6-ன் உதவியுடன் இரானின் உளவு அமைப்பான சவாக், சோவியத் முகவர்களை கண்காணித்து வந்தது. 1979-ஆம் ஆண்டு இரானியப் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்கத் தூதரகம் கைப்பற்றப்பட்ட நிலையில், இரானில் மேற்கத்திய நாடுகளின் உளவு வலையமைப்பு பெருமளவில் பலவீனமடைந்தது. அதே நேரத்தில், சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. இதனால், சோவியத் யூனியனின் செல்வாக்கு இரான் மற்றும் வளைகுடா பகுதிக்கு விரிவடையக்கூடும் என்ற கவலை அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு ஏற்பட்டது. பின்னர் குஜிச்கின், அந்த அமைப்பின் அதிகாரம் மற்றும் ஒழுக்கம் குறித்து பொதுவாக நிலவிய கருத்திலிருந்து மாறுபட்ட கேஜிபி அமைப்பின் ஒரு நிலையை வெளிப்படுத்தினார். தனது நினைவுக் குறிப்புகளில், கேஜிபி -க்குள் நிலவிய ஊழல், குழுவுக்குள் இருந்த பூசல்கள், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் செயல்திறன் குறைபாடு குறித்து அவர் பேசியிருந்தார். அவரது மேற்பார்வையின் கீழ் பணியாற்றிய இரண்டு ரகசிய முகவர்கள் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது கவலையை மேலும் அதிகரித்தது. அந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்தால், அந்த முகவர்களின் வலையமைப்புக்குத் தான் தலைமை வகித்தது வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று அவர் அஞ்சினார். அதே நேரத்தில், அவரது மனைவி கலினாவுடனான உறவும் மோசமடைந்தது. இவை அனைத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தை சமாளிக்க அவர் மதுவை நாடத் தொடங்கினார். 'ரெட்வுட்' புத்தகத்தின் ஆசிரியர் மெக்கின்டையரின் கூற்றுப்படி, சோவியத் அமைப்பு மற்றும் கேஜிபி மீது குஜிச்கினுக்கு ஏற்பட்ட விரக்தி, தனது பணியின் எதிர்காலம் குறித்த கவலைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் ஆகியவை அவரை பிரிட்டனுடன் ஒத்துழைக்க முடிவு செய்ய வழிவகுத்தன. அந்தப் புத்தகத்தின்படி, அவரது பாலியல் பிரச்னைகளும் அவை அவரது திருமண வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கமும் அவரது முடிவில் முக்கியப் பங்கு வகித்தன. மேற்கத்திய நாடுகளில் உள்ள மருத்துவர்களால் தனது பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்து, தனது திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும் என்று அவர் நம்பினார். தெஹ்ரானில் குஜிச்கின் மேற்கொண்ட பணிகளில் மிகவும் முக்கியமானதும் ரகசியமானதுமான பகுதியாக இருந்தது துதே கட்சியின் தலைவர்களுடனான அவரது தொடர்பு. புத்தகத்தின்படி, நீண்டகாலமாக கட்சியில் உறுப்பினராக இருந்த காகிக் அவனேசியன், துதே கட்சியின் மத்தியக் குழுவின் முதல் செயலாளரான நூருதீன் கியானூரியின் தகவல்களை சோவியத் தூதரகத்துக்கு எடுத்துச் செல்வார். இந்தத் தகவல்களில் இரானின் அரசியல் சூழல், அரசாங்கத்துக்குள் நிலவிய பூசல்கள் மற்றும் ராணுவத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மறுபுறம், துதே கட்சி சோவியத் யூனியனிடமிருந்து பணம் மற்றும் பிற வசதிகளைப் பெற்று வந்ததாக மெக்கின்டையர் கூறுகிறார். அவரது தகவல்களின்படி, சோவியத் வர்த்தகக் குழுவின் உதவியுடன் துதே கட்சி ஒரு இறக்குமதி நிறுவனத்தைத் தொடங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் மூலம் கட்சி பணம் மற்றும் பொருட்களைப் பெற்று வந்தது. கட்சியின் செய்தித்தாளுக்குத் தேவையான காகிதத்தையும் சோவியத் யூனியன் வழங்கியது. விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் செலவுகள் போன்ற சில செலவுகளும் இந்த வழியாகவே வழங்கப்பட்டன. இந்தத் தகவல்களில் ஒரு பகுதி, ராணுவத்துக்குள் துதே கட்சி நடத்தி வந்த ரகசிய அமைப்பு தொடர்பானதாக இருந்தது. அந்த அமைப்பில் 'குஸ்ரோ' என்று அழைக்கப்பட்ட முகமது மெஹ்தி பார்தவி, இந்த ரகசிய வலையமைப்புக்குத் தலைமை வகித்தார். ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் காவல்துறையில் பணியாற்றியவர்கள் இந்த வலையமைப்பில் உறுப்பினர்களாக இருந்தனர். மெக்கின்டையர் தனது ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, 1981-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த ரகசிய வலையமைப்பில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். இந்த ரகசிய வலையமைப்பில் இருந்த மிக முக்கியமான ராணுவ அதிகாரி ரியர் அட்மிரல் பஹ்ராம் அஃப்ஸாலி. அப்போது அவர் இரான் கடற்படையின் தலைவராக இருந்தார். அவர் மூலம் துதே கட்சிக்கும், பின்னர் சோவியத் யூனியனுக்கும் சென்ற இரண்டு ரகசிய தகவல்களை மெக்கின்டையர் குறிப்பிடுகிறார். முதல் தகவல், பாரசீக வளைகுடாவில் 'பாகிஸ்தான்' என்ற போர்க்கப்பலுடன் மூழ்கிய அமெரிக்க ஹார்பூன் ஏவுகணை தொடர்பான இடம். இரண்டாவது தகவல், சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் தகவல்தொடர்புகளை இரான் ராணுவ உளவுத்துறை கண்காணித்து வந்தது தொடர்பானதாகும். அஃப்ஸாலி நீதிமன்றத்தில் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால், இந்த இரண்டு சம்பவங்களிலும் துதே கட்சிக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். துதே கட்சிக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான தொடர்புக்கான ஆதாரங்கள், கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் தொலைக்காட்சியில் அளித்த வாக்குமூலங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சோவியத் யூனியனில் இருந்து வெளியிடப்பட்ட சில பழைய ஆவணங்கள், துதே கட்சித் தலைவர்கள் மாஸ்கோவில் உள்ள அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்ததையும், ரகசியமாகச் செயல்படுவதற்கான உதவி மற்றும் பயிற்சியைக் கோரியதையும் காட்டுகின்றன. பட மூலாதாரம், Penguin Books Ltd ராணுவத்துக்குள் துதே கட்சியின் ரகசிய அமைப்பு எவ்வளவு பெரியதாக இருந்தது, அதன் உண்மையான செயல்பாடு என்ன என்பது குறித்து பல்வேறு அறிக்கைகளும் ஆய்வுகளும் வெளியிடப்பட்டுள்ளன. துதே கட்சியின் முன்னாள் அதிகாரிகள், ராணுவத்துக்குள் அக்கட்சியின் ரகசிய அமைப்பும் வலையமைப்பும் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், இந்த ரகசிய அமைப்பின் சரியான நோக்கம் குறித்து அவர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அந்த ரகசிய அமைப்பின் அப்போதைய தலைவரான முகமது மெஹ்தி பார்தவி, 2016-ஆம் ஆண்டு 'அண்டிஷே போயா' இதழுக்கு அளித்த பேட்டியில், புரட்சிக்குப் பிறகும் இந்த ரகசிய அமைப்பைத் தொடர்ந்து செயல்படுத்த கியானூரி விரும்பியதாகக் கூறினார். ஆட்சிக் கவிழ்ப்பு பஹ்லவி ஆட்சியை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்பினர். மேலும், அரசாங்கம் கட்சியின் வெளிப்படையான செயல்பாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தால், கட்சியின் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு ரகசிய வலையமைப்பு இருக்க வேண்டும் என்றும் கியானூரி நம்பினார். கட்சியை ஆதரித்த ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதற்காக தனியாக ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் பார்தவி அந்தப் பேட்டியில் கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பைக் குறிப்பிட்டு ஓர் அதிகாரி, "எங்கள் ஆப்கானிஸ்தான் நண்பர்களுக்கு இருக்கும் திறனைவிட எங்களிடம் குறைவான திறன் இல்லை" என்று கூறினார். அதற்கு கியானூரி, "எனக்குத் தெரியும். ஆனால், இப்போது இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டிய நேரம் இல்லை. கட்சி தற்போது இஸ்லாமியக் குடியரசின் பக்கம் இருக்கிறது; அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது" என்று பதிலளித்தார். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் குஜிச்கினின் சொந்தத் தகவல்கள் அல்லது இரான் மற்றும் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்பு அமைப்புகளின் அறிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக, துதே கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் மாஸ்கோவிலிருந்து பணம் பெற்றதாக குஜிச்கின் கூறுகிறார். எனினும், இந்தக் கூற்று சுயாதீன ஆவணங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. சோவியத் யூனியன் துதே கட்சிக்கு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியதாக மெக்கின்டையர் மதிப்பிடுகிறார். துதே கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 8 லட்சம் தோமான்கள் வழங்கப்பட்டதைக் காட்டும் இரான் உளவுத்துறை அறிக்கையை அவர் மேற்கோள் காட்டுகிறார். அப்போதைய நாணய மதிப்பில் இது 40,000 டாலருக்கும் அதிகமாகும். ஒவ்வொரு மாதமும் இதே தொகை வழங்கப்பட்டதாகக் கருதி, ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் டாலர் என மெக்கின்டையர் மதிப்பிட்டுள்ளார். அதாவது, பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பணப் பரிவர்த்தனையின் அடிப்படையிலான மதிப்பீடே இந்தத் தொகையாகும். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் தனி ஆவணம் ஒன்றிலும் துதே கட்சிக்கு வழங்கப்பட்ட நிதியுதவி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் விளாடிமிர் புகோவ்ஸ்கியின் ஆவணத் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1980-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி, 1981-ஆம் ஆண்டுக்காக துதே கட்சிக்கு 3 லட்சம் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் தொகையை வழங்கும் பொறுப்பு கேஜிபியிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இந்த ஆவணத்திலிருந்து இந்தப் பணம் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ துதே கட்சிக்கு உண்மையில் கிடைத்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும், மெக்கின்டையர் விவரிக்கும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கும் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியுதவிக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் தெளிவாகத் தெரியவில்லை. துதே கட்சியின் மூத்த தலைவர் முகமது அலி அமுயி, 'கசப்பான பொறுமை' என்ற தனது புத்தகத்தில் கட்சியின் வருமானத்துக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி, கட்சியின் வருமானத்துக்கான ஆதாரங்கள் உறுப்பினர் கட்டணம், ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள், புத்தகங்கள் மற்றும் இதழ்களின் விற்பனை மற்றும் கட்சியால் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் வருமானம் ஆகியவையாகும். நட்பு நாடுகளிடமிருந்து பெறப்படும் நிதியுதவி கட்சியின் வருமானத்துக்கான ஆதாரமாக இருந்ததா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அது இல்லை என்று அமுயி பதிலளித்தார். ஆனால், உதாரணமாக, செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதம் மிகவும் குறைந்த விலையில் கிடைத்ததை அவர் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, கட்சி தொடர்பான நிறுவனங்களின் கணக்குகள் கியானூரியின் நேரடி மேற்பார்வையில் இருந்தன. அவை கட்சியின் வழக்கமான நிதிப் பிரிவின் கணக்குகளில் இருந்து தனியாகப் பராமரிக்கப்பட்டன. புத்தகத்தின்படி, எம்ஐ6 அமைப்புடன் குஜிச்கின் முதன்முதலில் முக்கியமான சந்திப்பை 1981-ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி, வடக்கு தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற சாட்டனூகா உணவகத்தில் மேற்கொண்டார். இளம் பிரிட்டிஷ் உளவு அதிகாரியான இயன் மெக்கர்டி, குஜிச்ச்கின் யாராலும் கண்காணிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, அவரை அணுகி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒரு வாரத்துக்குப் பிறகு, மெக்கர்டி ஒரு லேண்ட் ரோவர் வாகனத்தில் குஜிச்ச்கினை ஏற்கெனவே ஒப்புக்கொண்ட இடத்துக்கு அழைத்துச் சென்றார். ரஷ்ய அதிகாரி பின் இருக்கையில் படுத்துக்கொண்டு, யாருடைய பார்வையிலும் படாமல் இருப்பதற்காக ஒரு போர்வையால் தன்னை மூடிக்கொண்டார். பின்னர், பிரிட்டிஷ் தூதரகத்துக்கு அருகில் இருந்த மெக்கர்டியின் வீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த வீட்டின் குளியலறையில் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மெக்கர்டியின் கூற்றுப்படி, வீட்டில் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கு குளியலறையே மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தது. முதல் சந்திப்பின்போது, குஜிச்கின் சோவியத் தூதரகத்தின் தொலைபேசி குறிப்பேடு ஒன்றைக் கொண்டு வந்ததாக மெக்கின்டையர் எழுதுகிறார். அதில் இரானில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சோவியத் தூதர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த 'லைன் என்' என்ற சோவியத் உளவாளிகளின் ரகசிய வலையமைப்பு குறித்த தகவல்களையும் அவர் வழங்கினார். அந்த உளவாளிகளின் அடையாளங்கள், அவர்கள் பணியாற்றிய இடங்கள் மற்றும் கேஜிபியின் பிற ரகசிய நடவடிக்கைகள் குறித்து அவர் மெக்கர்டியிடம் தெரிவித்தார். அதன்பின்னர், சோவியத் யூனியனுக்கும் துதே கட்சிக்கும் இடையிலான உறவு, அக்கட்சியின் ரகசிய வலையமைப்பு, அது பெற்ற நிதி மற்றும் உளவுத் தகவல் உதவிகள், மேலும் துதே கட்சிக்கும் கேஜிபிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த தகவல்களையும் அவர் வழங்கினார். எம்ஐ6 அவருக்கு 'ரெட்வுட்' என்ற குறியீட்டுப் பெயரை வழங்கியது. தெஹ்ரானில் அவரது ரகசிய ஒத்துழைப்பு சுமார் ஓராண்டு தொடர்ந்தது. எனினும், அவர் மாஸ்கோவுக்கு திரும்ப அழைக்கப்பட்டு, அவரது ரகசிய நடவடிக்கைகள் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம் அதிகரித்தது. இதன் விளைவாக, பிரிட்டன் தனது திட்டங்களை மாற்றியது. இறுதியில், 'மைக்கேல் ரட்' என்ற பெயரில் அவருக்கு பிரிட்டன் கடவுச்சீட்டு வழங்கியது. 1982-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி மாலை, குஜிச்கின் ஒரு தூதரக வாகனத்தில் தெஹ்ரானில் இருந்து துருக்கி எல்லையை நோக்கிப் புறப்பட்டார். பிரதமர் அலுவலகத்தின் உளவுத்துறைப் பிரிவின் துணைத் தலைவராக இருந்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்படும் சயீத் ஹஸாரியனின் கூற்றுப்படி, இரான் அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்றனர். ஆனால் தப்ரிஸுக்கும் மாகோவிற்கும் இடையில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அந்தக் குழு பசர்கான் எல்லையை அடைந்தது. குஜிச்ச்கின் எல்லைச் சோதனைச் சாவடியில் இருந்தபோது, அதிகாரிகள் அவரது தூதரக பிஎம்டபிள்யூ வாகனம் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். குஜிச்கின் அந்த காரை அங்கேயே விட்டுச் சென்றார். தனது சோவியத் ஆவணங்கள் மற்றும் இரான் பயண அனுமதிச் சீட்டை காரின் டாஷ்போர்டில் வைத்துவிட்டு, பிரிட்டிஷ் கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டு எல்லைச் சோதனைச் சாவடியை நோக்கிச் சென்றார். குஜிச்கின் பசர்கான் எல்லையை எவ்வாறு கடந்தார் என்பது குறித்து புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்கின்டையரின் கூற்றுப்படி, அவர் போலியான பிரிட்டிஷ் கடவுச்சீட்டைக் காட்டினார். தான் ஒரு முக்கியமான பணிக்காக இரானுக்கு வந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி என்றும், தற்போது துருக்கி வழியாக பிரிட்டனுக்குத் திரும்பிச் செல்வதாகவும் அவர் கூறினார். எல்லையில் சில 'புரட்சிப் படையினரால்' அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த நேரத்தில், தனக்கு பாரசீக மொழி தெரியாது என்று அவர் நடித்தார். ஆனால், பதற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் தவறுதலாக பாரசீக மொழியில் பதிலளித்துவிட்டார். இருந்தபோதிலும், அவரது அடையாளம் வெளிவரவில்லை; அவர் கைது செய்யப்படவும் இல்லை. மொழிபெயர்ப்பாளர் ஒருவர் முன்னிலையில் சுங்கத்துறை கட்டடத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த முறையும் தனக்கு பாரசீக மொழி பேசத் தெரியாது என்று அவர் வலியுறுத்தினார். இறுதியில், அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு, துருக்கியைச் சென்றடைந்தார். அங்கு எம்ஐ6 அதிகாரிகள் ஏற்கெனவே அவருக்காகக் காத்திருந்தனர். மெக்கின்டையர், இயன் மெக்கர்டி மற்றும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கிட்டத்தட்ட அனைத்து உயிருடன் இருக்கும் எம்ஐ6 அதிகாரிகளிடமும் பேசியுள்ளார். எனினும், அதிகாரப்பூர்வ எம்ஐ6 ஆவணங்களைப் பார்ப்பதற்கு தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அவரே கூறுகிறார். மேலும், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல அதிகாரிகளின் உண்மையான பெயர்களுக்குப் பதிலாக புனைப்பெயர்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரகசிய நடவடிக்கை குறித்த முக்கியத் தகவல்கள் பல்வேறு ஆதாரங்களுடன் ஒத்துப்போகின்றன. எனினும், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உரையாடலையும் ஒவ்வொரு விவரத்தையும் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது. குஜிச்கின் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பான முக்கியமான தகவல் ஒன்று இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மெக்கின்டையரின் கூற்றுப்படி, குஜிச்கினிடம் இருந்து கிடைத்த தகவல்களை இரானிடம் வழங்குவதற்கான திட்டத்தை சிஐஏ மற்றும் எம்ஐ6 ஆகியவை இணைந்து உருவாக்கின. அப்போது சிஐஏ-வின் தலைவராக இருந்த வில்லியம் கேசி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. குஜிச்கின் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இரானில் இருந்த குறைந்தது 100 முதல் அதிகபட்சம் 200 சோவியத் உளவாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உதவியாளர்களின் பெயர்களைக் கொண்ட அறிக்கையை சிஐஏ தயாரித்தது. பாகிஸ்தானில் இஸ்லாமியக் குடியரசின் (இரான்) பிரதிநிதிகளுடனான சந்திப்பில் குஜிச்கினும் அவரது பிரிட்டிஷ் அதிகாரிகளும் பங்கேற்பதை உறுதி செய்யும் பொறுப்பு எம்ஐ6-க்கு இருந்தது. இந்த நடவடிக்கையின் நோக்கம் கேஜிபியை அதிர்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்ல. இந்த ரகசிய ஒத்துழைப்பு மூலம் இரானுடன் தொடர்பை ஏற்படுத்தி, சோவியத் யூனியனுக்கு எதிராக இரானின் நிலையை வலுப்படுத்த முடியும் என்று கேசி நம்பினார். இந்தச் சந்திப்பு இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானின் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ -யின் தலைமையகத்தில் நடைபெற்றது. மெக்கின்டையரின் கூற்றுப்படி, 1982-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு, குஜிச்கினும் அவரது பிரிட்டிஷ் அதிகாரிகளும் இரண்டு இரான் பாதுகாப்பு அதிகாரிகளான ஹபிபுல்லா பே-தரஃப் மற்றும் முகமது ஜவாத் மதர்ஷாஹி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பட மூலாதாரம், Galina Kokosova Archives புத்தகத்தின்படி, சோவியத் உளவாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ரகசிய வலையமைப்புகளின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணங்களும் பட்டியல்களும் இரான் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டன. இரானில் கேஜிபியின் அமைப்பு, அதன் தகவல் தொடர்பு முறைகள், ரகசிய பாதுகாப்பு இடங்கள், துதே கட்சிக்கு வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் அதன் ராணுவ அமைப்பு குறித்து குஜிச்ச்கின் பாரசீக மொழியில் தகவல்களை வழங்கினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை