மதுரையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டாம். அரசு அலுவலகங்களில் தவறு நடக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவும் அதிமுகவும் நன்றாக ஆட்சி செய்தது என எடப்பாடி பேசுகிறார். பொள்ளாச்சி சம்பவத்தில் எடப்பாடி நடந்ததை போல திமுக செய்தது. திமுகவிற்கு ஆதரவளிக்கும் உங்களை நம்பி எப்படி அதிமுகவினர் பயணிப்பார்கள். எங்களுக்கு தேர்தல் நேரத்தில் ஆதரவளித்ததை மறக்க மாட்டோம். தேவையான விமர்சனங்களை கட்டாயம் எடுத்துக்கொள்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விரக்தியின் உச்சத்துல, பகல்லேயே நிதானம் இல்லாம பேசுகிறார். அவரோட பேச்சு, நடத்தை எல்லாம் பார்த்தாலே, அவர் எந்த மாதிரியான ஆளுன்னு வெளிப்பட்டுவிட்டது. அவரை திருத்தவே முடியாது, இப்படி ஆபாசமா பேசுற ஒருத்தரை நம்பி பயணிக்கலாமா? திமுகவினரே, அவரோட பேச்சை உங்க குடும்பத்துல இருக்கிறவங்களுக்குப் போட்டு காட்டிப் பாருங்க. இப்படி ஒருத்தரை நம்பி பயணிக்கலாமா? பெண்களோட அந்தக் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்க முடியுமா?அவர் பின்னாடி இருக்கிற பெண் வேட்பாளர் அங்கயும் இங்கயும் திரும்பி எவ்வளவு கஷ்டப்படுறாருன்னு நாம வீடியோல பார்த்திருப்போம்” இவ்வாறு அவர் பேசினார். ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்! “சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா “அரிசி விலை உயுர்வு: ஆந்திராவைப் போல் கிலோ ரூ.50-க்கு ரேஷன் கடைகளில் அரிசி விற்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல் கரூர் துயரம்: அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“உதயநிதி நிதானம் இல்லாமல் பேசுகிறார்!” – அமைச்சர் நிர்மல் குமார்
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk