கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 270ஆம் தேதி கரூரில் முதல்வரும் தவெக தலைவருமான விஜயின் கரூர் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானதும், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலைக்கான நியமன ஆனை வழங்கினார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் அந்த ஆணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “ என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார். “மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்! “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்! தேங்காய் கழிவில் இருந்து மருத்துவக்கட்டு – பொள்ளாச்சி இளைஞருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து! முதல் ஒருநாள் போட்டி : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“கரூர் துயரம்: ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு!” – முதலமைச்சர் விஜய்
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk