தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்.. வீடியோ வெளியிட்ட தமிழக அரசு!!

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ Politics ✍️
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்.. வீடியோ வெளியிட்ட தமிழக அரசு!!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தவெக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 15-ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ள நிலையில், தங்க கொள்முதலுக்காக டெண்டர் கோரப்பட்டு, ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர் விஜய் அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றதால், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தினை அறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்க முடியவில்லை. இந்தச்சூழலில் தான், ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ வழங்​கும் திட்​டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் விஜய் நாளை தொடங்கி வைக்​கிறார். இதற்காக, நாளை காலை விமானம் மதுரை செல்லும் அவர், முதலாவதாக மீனாட்சி அம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிறகு, ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் அவர், 25 குழந்தைகளுக்கு நேரடியாக மோதிரத்தை அணிவிக்க உள்ளார். முதல்வர் வருகையையொட்டி 4,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தான், இந்தத் திட்டம் தொடர்பான வீடியோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |… pic.twitter.com/BZ1t10URsE

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை