ஆராய்ச்சியாளர்கள் அதிர வைக்கும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 4,300 முதல் 4,500 ஆண்டுகள் பழமையான ஒரு மிகப்பெரிய ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை நெட்வொர்க்கை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளனர். சீனாவின் மங்கோலியா உள் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடந்த 'ஹூச்செங்சுய்' (Houchengzui) என்ற பண்டைய கற்கால நகரத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர வைக்கும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 4,300 முதல் 4,500 ஆண்டுகள் பழமையான ஒரு மிகப்பெரிய ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதை நெட்வொர்க்கை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்துல பீட்சா டெலிவரி பாய் தான்; இப்ப 2 வீடு, 3 ஹோட்டலுக்கு சொந்தக்காரர்: ஆஸ்திரேலியாவை மிரட்டிய இந்தியர் சீன சமூக அறிவியல் அகாடமியின் தொல்பொருள் நிறுவனம் மற்றும் பிராந்திய ஆய்வுக் குழுக்கள் இணைந்து கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வரும் அகழ்வாராய்ச்சியில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. பிரமாண்டக் கோட்டையும்... அதன் அடியில் ரகசிய உலகமும் ஹுன் ஆற்றின் (Hun River) வடகரையில் அமைந்துள்ள இந்த நகரம், பண்டைய கால அளவுகோல்களின்படி மிக பிரமாண்டமான திட்டமிடப்பட்ட நகர அமைப்பாகும். இந்த நகரம் உள் நகரம், வெளி நகரம், பலத்த பாதுகாப்பு கொண்ட நுழைவு வாயில்கள், அகழிகள் மற்றும் சுவர்களால் சூழப்பட்டிருந்தது. இந்த பிரமாண்ட கோட்டைக்கு அடியில் 1.5 மீட்டர் முதல் 6 மீட்டர் ஆழத்தில், சக்கரத்தின் ஆரங்களைப் போல மையப் பகுதியிலிருந்து வெளிப்புறமாக விரிவடையும் 6 குறுக்கு மறுக்கு சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதற்காகப் பயன்படுத்தப்பட்டது இந்த சுரங்கம்? எதிரிகள் கோட்டையைத் தாக்கும் போது, படைவீரர்கள் ரகசியமாக நகர்ந்து சென்று தாக்குதல் நடத்தவும், தப்பிக்கவும் இந்த பாதைகள் பயன்பட்டிருக்கலாம்.கோட்டையின் உள்ளே இருக்கும் முக்கியமான இடங்களுக்கு பொதுமக்கள் அல்லது அதிகாரிகள் ரகசியமாக செல்ல இது வழிவகுத்துள்ளது. அதிநவீன வடிவமைப்பு அவசர அவசரமாகத் தோண்டப்பட்ட குழிகள் போல இல்லாமல், லாங்ஷான் (Longshan Culture) கலாச்சாரத்தின் வளைவு வடிவ (Arched) கலைநயத்துடன், தொழில்முறை பொறியியல் திறனுடன் இவை செதுக்கப்பட்டுள்ளன. சுவரில் இன்னமும் அழியாத மனித கரங்களின் சுவடுகள் இந்த சுரங்கப்பாதைகளின் சுவர்களில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு எளிய கல் கருவிகளைக் கொண்டு மனிதர்கள் கைப்பட செதுக்கிய கருவித் தழும்புகள் இன்னமும் மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. இது வெறும் ராணுவக் கோட்டை மட்டுமல்லாமல், அக்காலகட்டத்திலேயே ஒரு வலிமையான ஆட்சியாளரின் கீழ் இயங்கிய அதிநவீன சமுதாயத்தின் மண்டல அதிகார மையமாக இருந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பூமிக்கு அடியில் 4,500 வருட ரகசிய பாதை: எதிரிகளை லாக் செய்ய சீனா போட்ட பிளான்; இவ்வளவு பெரிய டெக்னாலஜியா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk