SIR சர்ச்சை! 370 நீக்கம் முதல் ராமர் கோயில் வரை.. ஞானேஷ் குமாரின் பரபரப்பு பின்னணி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
SIR சர்ச்சை! 370 நீக்கம் முதல் ராமர் கோயில் வரை.. ஞானேஷ் குமாரின் பரபரப்பு பின்னணி!

இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ் குமார் காலத்தில் SIR (Special Intensive Revision) தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கடும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்கம், மென்பொருள் கட்டுப்பாடு, Form 6 மாற்றங்கள் குறித்து இரு ஆணையர்கள் 14 முறை எழுத்து மூலம் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல். ஆனால் இறுதி முடிவுகள் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. செய்தியாளர் - M.மீரா இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் கடந்த 2025 பிப்ரவரி 19ஆம் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலத்தில் SIR எனப்படும் Special Intensive Revision தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் SIR தொடர்பான முடிவுகள் குறித்து குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியல் மென்பொருள் மற்றும் மேல்முறையீடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்த எதிர்ப்பு இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் Form 6-ல் SIR தொடர்பான கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட்டதற்கு இரு தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு விதிகளில் திருத்தம் தேவை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் கட்டுப்பாடு டெல்லியில் வைத்திருப்பது , வாக்காளர் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் மீண்டும் சேர்த்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. சில விவகாரங்களில் தங்களது கவலைகளை மத்திய அரசின் உயரதிகாரியான அமைச்சரவைச் செயலரிடமும் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்கையில், கருத்து வேறுபாடுகள் ஆலோசனை நடைமுறையின் இயல்பான பகுதியாகும் என்றும், இறுதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஞானேஷ் குமாரின் பின்னணி 1988ஆம் ஆண்டு கேரளா கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், மத்திய அரசில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய போது, ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிட ஒரு தனி அறக்கட்டளையை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அந்த காலகட்டத்தில், ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக (Additional Secretary) பணியாற்றிக் கொண்டிருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ராமர் கோவில் அறக்கட்டளையை உருவாக்குவதற்கான பணிகளைப் போர்க்கால அடிப்படையில் கவனிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒரு பிரத்யேகப் பிரிவு (Desk) உருவாக்கப்பட்டது. இந்த முக்கியமான பிரிவின் தலைவராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். இந்த சிறப்புப் பிரிவின் தலைவராக இருந்து, 'ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா' அறக்கட்டளையை உருவாக்குவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை தயாரித்தல், அதன் விதிகளை வகுத்தல் மற்றும் அதன் முழுமையான கட்டமைப்பை (Draft & Constitution) உருவாக்குவதில் இவர் முக்கியப் பங்காற்றினார். இதற்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீர் விவகாரங்களைக் கவனிக்கும் பிரிவின் தலைவராக இருந்த ஞானேஷ்குமார், ஜம்மு காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவை நீக்கும் (Abrogation of Article 370) அரசின் முக்கிய நடவடிக்கையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, 2020ஆம் ஆண்டில் ராமர் கோவில் அறக்கட்டளையை முறைப்படி அமைக்கும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, அவர் ஐஐடி கான்பூரில் சிவில் இன்ஜினியரிங், ICFAI-யில் பிசினஸ் ஃபைனான்ஸ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றுள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை