சென்செக்ஸ் 2 வருஷமா ஒரே இடத்துல சம்மணம் போட்டு உக்காந்துருக்கே: உங்க எஸ்.ஐ.பி-ஐ ஸ்டாப் பண்ணலாமா?

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ Business ✍️
சென்செக்ஸ் 2 வருஷமா ஒரே இடத்துல சம்மணம் போட்டு உக்காந்துருக்கே: உங்க எஸ்.ஐ.பி-ஐ ஸ்டாப் பண்ணலாமா?

SIP investments சந்தை தேக்கநிலையில் இருந்தாலும் எஸ்பிஐ முதலீடுகள் தொடர்ந்து உறுதியுடன் உள்ளன. மாதாந்திர எஸ்பிஐ முதலீடு சமீபத்தில் ரூ.32,000 கோடியைக் கடந்துள்ளது. 2 வருஷமா மார்க்கெட் டல்லா இருக்கா? இந்த சிம்பிள் சீக்ரெட் தெரிஞ்சா உங்க SIP பணத்துக்கு எப்பவுமே நஷ்டம் வராது! (Image: AI) சென்செக்ஸ் குறியீடு கடந்த 2024 செப்டம்பர் 26 அன்று தொட்ட உச்சத்திற்குப் பிறகு, கடந்த ரெண்டு வருஷமா பெரிய அளவுல மேலயும் போகல, கீழேயும் இறங்கல. மார்க்கெட் திடீர்னு மளமளன்னு சரியுறது வேற, இப்படி ஒரே இடத்துல சம்மணம் போட்டு உக்காந்துக்கிட்டு இருக்கிறது வேற. இந்த மாதிரி மார்க்கெட் மாதக்கணக்கிலேயோ அல்லது வருடக்கணக்கிலேயோ பெரிய லாபம் தராம ஒரே மாதிரியே இருக்குற நிலைக்குத் தான் 'டைம் கரெக்‌ஷன்' (Time Correction)னு பேரு. பிரைஸ் கரெக்‌ஷன் vs டைம் கரெக்‌ஷன்: என்ன வித்தியாசம்? சந்தை திடீர்னு விழுந்தா நம்ம போர்ட்ஃபோலியோ மதிப்பு கடகடன்னு குறையும், பாக்கவே வலிக்கும். ஆனா, இந்த டைம் கரெக்‌ஷன் அது மாதிரி இல்ல. உங்க முதலீட்டு மதிப்பு மாசக்கணக்கல ஒரே இடத்துல நிக்கும், ஆனா மறுபக்கம் விலைவாசி (Inflation) ஏறிட்டே போறதால பணத்தோட மதிப்பு குறைஞ்சுகிட்டே இருக்கும். நாம நினைச்ச இலக்கை அடைய இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்குமோனு தோணும். பேங்க்ல போடுற பிக்சட் டெபாசிட் (FD) கூட இதவிட நல்லா லாபம் தருது போல இருக்கேனு பல பேருக்கு டென்ஷன் ஆகலாம். மார்க்கெட் அடி வாங்குனா உடனே பழையபடி மேல வந்துடுமானு கேட்டா, கண்டிப்பா இல்ல. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தா உண்மை புரியும். 2008-ல் ஏற்பட்ட மார்க்கெட் சரிவு சரியாகி, பழைய நிலைக்குத் திரும்ப கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு மேல ஆச்சு. 1994-ல் 27 மாதங்கள் கரெக்‌ஷன் இருந்தது, மீண்டு வர மேலும் 31 மாதங்கள் தேவைப்பட்டுது. ஏன், 2000-ம் ஆண்டு வந்த டெக் பபிள் (Tech Bubble) சரிவுல இருந்து மீண்டு வர கிட்டத்தட்ட நாலு வருஷம் ஆச்சு பாத்துக்கோங்க! இப்போ நடக்குற மார்க்கெட் சரிவு ஏன் ரொம்ப வித்தியாசமா இருக்கு? முந்தைய காலத்துல நடந்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் இப்போ நடக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இப்போ நம்ம ஊருல மக்களே பங்குச்சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் அதிகமா பணத்தை போடுறாங்க (Domestic participation). SIP முதலீடுகள் தொடர்ச்சியா வந்துகிட்டே இருக்கு. கடனும் பெரிய அளவுல இல்ல, முதலீட்டாளர்கள் வட்டாரமும் பெருசாகி இருக்கு. அதனால இது பேங்குகள் முடங்குற மாதிரியான பெரிய பிரச்சினை இல்ல, மாறாக இதுவொரு நீண்ட கால மதிப்பீடு மற்றும் கால திருத்தம் (Valuation-and-time correction) தான் அப்படின்னு எக்ஸ்பர்ட்ஸ் சொல்றாங்க. மார்க்கெட் ஒரே இடத்துல தேங்கி நின்னாலும், மக்கள் எஸ்.ஐ.பி. (SIP) மூலமா மாசம் மாசம் பணம் போடுறதை நிறுத்தவே இல்ல. மாதாந்திர SIP முதலீடு இப்போ 32,000 கோடியைத் தாண்டி போயிட்டு இருக்கு. அதேசமயம், சிலபல காரணங்களால 53.82 லட்சம் SIP கணக்குகள் மூடப்பட்டும் இருக்கு (ஆனா அதேநேரம் 66.39 லட்சம் புது கணக்குகளும் தொடங்கி இருக்காங்க). ஆகஸ்ட் 2026 நிலவரப்படி எஸ்.ஐ.பி.-ஐ பாதியிலேயே நிறுத்துற விகிதம் 81% அளவுக்கு குறைஞ்சிருந்தாலும், மக்களோட சோர்வு அங்கங்க தெரியத்தான் செய்யுது. எஸ்.ஐ.பி. லாபம் பாக்க லேட் ஆகுமா? ஏமாற்றம் தருமா? மார்க்கெட் டல்லா இருக்குங்குறதுக்காக உங்க நீண்ட கால எஸ்.ஐ.பி. பிளான் ஃபெயில் ஆயிடுச்சுனு அர்த்தமில்ல. DSP அசெட் மேனேஜர்ஸ் கடந்த 30 வருஷ சென்செக்ஸ் மொத்த வருமானக் குறியீட்டை (Sensex TRI SIP) வச்சு ஒரு ஸ்டடி பண்ணாங்க. அதுல என்ன தெரியவந்துச்சுனா, 99% நேரத்துல எஸ்.ஐ.பி. முதலீடுகள் கடன் பத்திரங்களை (Debt) விட அதிக லாபத்தையே தந்துருக்கு. ஆனா அதேசமயம், இந்த 30 வருஷ பயணத்துல 81% SIP முதலீடுகள் ஏதோ ஒரு கட்டத்துல மைனஸ்ல (Negative returns) போய்விட்டுதான் மேல வந்திருக்கு! இந்த மாதிரி தட்டையான மார்க்கெட்ல எஸ்.ஐ.பி-ஐ கட் பண்ணிடலாமா? நிச்சயமா பண்ணக்கூடாது! இப்படி மார்க்கெட் டல்லா இருக்குறப்போ SIP-ஐ ஸ்டாப் பண்ணிட்டீங்கன்னா, மார்க்கெட் விலை கம்மியா இருக்கும்போது நிறைய யூனிட்டுகளை வாங்குற பொன்னான வாய்ப்பை மிஸ் பண்ணிடுவீங்க. 'ருபீ காஸ்ட் ஆவரேஜிங்' (Rupee-cost averaging) அப்படிங்கிற மேஜிக் ஒர்க் ஆகுறதே இந்த மாதிரி நேரத்துலதான். உங்க இலக்கும், ரிஸ்க் எடுக்கும் திறனும் மாறாதவரைக்கும், மார்க்கெட் ரெண்டு வருஷம் சம்மணம் போட்டு உக்காந்துட்டா உங்க 7 முதல் 10 வருஷ முதலீட்டுத் திட்டத்தை அது ஒன்னும் பண்ணிட முடியாது. ரெண்டு வருஷமா மார்க்கெட் ஏறலையேனு எல்லாப் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு கிடைக்குதுனு அர்த்தமில்ல. கம்பெனிகளின் வருமானமும் லாபமும் தொடர்ந்து வளர்ந்தாலும், சில இடங்கள்ல விலைகள் இன்னும் கொஞ்சம் நியாயமான அளவுக்குத்தான் வந்துருக்கு. அதனால, "இன்டெக்ஸ் இவ்வளவு நாளா ஏறல, அதனால பங்கு முதலீட்டை இப்பவே மடமடன்னு கூட்டுவோம்"னு கண்மூடித்தனமா இறங்கக் கூடாதுனு எக்ஸ்பர்ட்ஸ் எச்சரிக்கிறாங்க. கம்பெனியோட லாபம், விலை மதிப்பீடு (Valuation) இதெல்லாம் பாத்துட்டுதான் முடிவு பண்ணனும். சரி, இந்த டைம் கரெக்‌ஷன் நேரத்துல இன்வெஸ்டர்ஸ் என்னதான் பண்ணனும்? குறுகிய கால மார்க்கெட் ஏற்ற இறக்கத்தைப் பார்த்து பதறாம, அமைதியா உங்க வேலையைப் பாருங்க. SIP முதலீடுகள் தொடர்ந்து பண்ணுங்க, அது வாங்குற விலையை ஆவரேஜ் பண்ணித் தரும். உங்ககிட்ட ஒரேடியா பெரிய தொகை (Lump sum) இருந்தா, அதை அப்படியே மொத்தமா போடாம STP (Systematic Transfer Plan) மூலமா கொஞ்சம் கொஞ்சமா மார்க்கெட்ல இறக்குங்க. பங்குச்சந்தையில் இன்னும் பணம் போடுறதா இருந்தா, அது சந்தை எவ்வளோ விழுந்துருக்குங்குறதை வச்சு இருக்கக்கூடாது. உங்க முதலீட்டு காலம் ரொம்ப லாங் டெர்மா இருக்கா, உங்களால ரிஸ்கை தாங்க முடியுமானு யோசிச்சு பார்த்து செயல்படுங்க! Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை