Tamil Nadu Latest News Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்! பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மதுராந்தகம் பிரச்சாரத்தில் விஜய் பேசியதற்கு ஸ்டாலின் பதிலடி மதுராந்தகம் பரப்புரையில் முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அவரது அரசியல் செயல்பாடுகள் மற்றும் வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், “ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என ஹை பிட்ச்-இல் கத்தினீர்களே? உங்கள் ஸ்க்ரிப்ட் பேப்பரை அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!” என்று குறிப்பிட்டிருந்தார். செப்டமர் 28-ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய். புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியத்தை பகல் 1 மணிக்கு திறந்து வைக்கிறார். மாலை 4:30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
Chennai News Updates: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - செப்.28 தொடக்கம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk