பிரசாந்த் கிஷோரின் மாஸ்டர் பிளான்: ஜன் சுராஜ் கட்சி; டெல்லியில் விரிவுப்படுத்த திட்டம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
பிரசாந்த் கிஷோரின் மாஸ்டர் பிளான்: ஜன் சுராஜ் கட்சி; டெல்லியில் விரிவுப்படுத்த திட்டம்

ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எழுதியவர்: புஷ்கர் பனகர் பாட்னாவின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பெற்ற அபார வெற்றிக்கு பிறகு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியின் செல்வாக்கை பீகாருக்கு வெளியே முதன்முறையாக டெல்லியில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளார். 49 வயதான பிரசாந்த் கிஷோர், டெல்லியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க அதில் டெல்லியில் கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு 'ஸ்டீயரிங் கமிட்டி' அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வியூக வகுப்பாளரில் இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரால் அக்டோபர் 2, 2024 அன்று தொடங்கப்பட்ட ஜன் சுராஜ் கட்சி, நவம்பர் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் களம் கண்டது. 243 தொகுதிகளில் 238 இடங்களில் போட்டியிட்ட போதிலும், அக்கட்சியால் இலக்கை அடைய முடியாமல் போனது. அத்தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது, ஆர்.ஜே.டி தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். அத்தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த நிதின் நபீன், பா.ஜ.க தேசிய தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த இடைத்தேர்தல் வந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ள பூர்வாஞ்சல் (பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள்) வாக்காளர்களிடையே தனது செல்வாக்கை உயர்த்த ஜன் சுராஜ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியின் லோக் கலா மஞ்ச் அல்லது ஜன்பத்தின் வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் டெல்லி வாழ் பூர்வாஞ்சல் ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மக்கள் பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளாலும் சலிப்படைந்துள்ளனர். மேலும், பீகார் மற்றும் பாங்கிபூரில் பிரசாந்த் கிஷோரின் திட்டங்களை அவர்கள் பார்த்துள்ளனர். டெல்லியிலும் நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சியின் டெல்லி அலுவலகத்திற்காக சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வாடகை ஒப்பந்த நடைமுறைகள் மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லி கமிட்டியில் இடம்பெறும் முக்கிய முகங்கள் அறிவிக்கப்படவுள்ள இந்த ஸ்டீயரிங் கமிட்டி தான் டெல்லி ஜன் சுராஜ் கட்சியின் முன்னோடியாகச் செயல்படும். இதில் இடம்பெற வாய்ப்புள்ள முக்கிய நபர்கள். ஜன் சுராஜ் கட்சியின் எதிர்கால இலக்குகள் கமிட்டி உறுப்பினர் சாந்தனு குமார் தெரிவிக்கையில், "டெல்லியில் கட்சி கட்டமைப்பு இல்லாதபோதிலும், பிரசாந்த் கிஷோரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2027 டெல்லி மாநகராட்சித் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தல் மற்றும் 2030 டெல்லி சட்டமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும். டெல்லி வாக்காளர்களில் 25% இருக்கும் பூர்வாஞ்சல் மக்கள் உட்பட அனைத்து சமூக மற்றும் பொருளாதார தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு கட்சியாக நாங்கள் செயல்படுவோம். காற்று மாசுபாடு மற்றும் யமுனை நதியைச் சுத்தம் செய்தல் போன்ற டெல்லியின் முக்கியப் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளை வழங்கி தீர்ப்பதே எங்களது முக்கிய நோக்கம்” என்றார். டெல்லியின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் உள்ள 15-20 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பூர்வாஞ்சல் மக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடித்து (48/70 இடங்கள்) பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது. அதேபோல, 2024 மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் பா.ஜ.க தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை