மேற்கு வங்கத்தில் பல தசாப்தங்களாக அரசியல் எதிரிகளாக விளங்கும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் தங்களுக்குள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. எழுதியவர்: மனோஜ் மேற்கு வங்கத்தில் பல தசாப்தங்களாக அரசியல் எதிரிகளாக விளங்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ(எம்) ஆகிய கட்சிகள், எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தற்போது தங்களுக்குள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. 'இந்தியா' கூட்டணியின் உறுப்பினர்களான இவ்விரு கட்சிகளும், இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தொடர்போ அல்லது பேச்சுவார்த்தையோ இல்லாமல் இருந்து வந்தன. ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க வெள்ளிக்கிழமை அன்று மம்தா பானர்ஜியும், சி.பி.ஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியும் தொலைபேசியில் பேசியதாகவும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை, தேர்தல் நடைமுறை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் பேசி, வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இந்தியா கூட்டணியின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கடிதமும் உடனடியாக வந்த பதிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கூட்டம் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் பா.ஜ.க அல்லாத பிற கட்சிகளுக்கும் சி.பி.ஐ(எம்) பொதுச்செயலாளர் கடிதம் எழுதிய இரண்டு நாட்களில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக, வியாழக்கிழமை அன்று எம்.ஏ. பேபிக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, நாட்டில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது என்ற அவரது கருத்தை ஏற்றுக்கொண்டார். செப்டம்பர் 23 அன்று எம்.ஏ. பேபி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்தியத் தேர்தல் ஆணையம் குறித்து செப்டம்பர் 23 அன்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியான செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் ஆணையம் எவ்வளவு சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது என்பதை அது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையும் நமது ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கும் மிகவும் அசாதாரணமான சூழல் இது. நாங்கள் எழுப்பிய அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்துவிட்டு, தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. இதன் மூலம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்படுகிறது. சூழ்நிலையின் அவசியத்தை கருதி எதிர்க்கட்சிகள் உடனடியாகச் சந்தித்துப் பேசுவது புத்திசாலித்தனமாக இருக்கும். ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் வாக்குரிமையைப் பாதுகாக்க மக்கள் எதிர்க்கட்சிகளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான த.வெ.க, பி.ஜே.டி மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போன்ற இந்தியா கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளுக்கும் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளார். இந்தியா கூட்டணிக் கட்சிகள் உடனடியாகச் சந்தித்து ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி பேபியிடம் கூறியதாகத் தெரிகிறது. மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரான மம்தாவும் அவரது கட்சியும் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையத்துடன் முரண்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் என்ன பிரச்சனை? தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் பிளவை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புலனாய்வு செய்தி அம்பலப்படுத்தியதில் இருந்தே இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்பில் இருந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் தொடர்பான முடிவுகளுக்கும், நடைமுறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடுகளுக்கும் எதிராக 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தங்களின் ஆட்சேபனைகளைப் பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர் என்பது அந்த செய்தியின் மூலம் தெரியவந்தது. இதற்கு செப்டம்பர் 23 அன்று பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆணையர்களின் எழுத்துப்பூர்வக் குறிப்புகளை ஒப்புக்கொண்ட போதிலும், அவை அமைப்பின் முடிவெடுக்கும் நடைமுறையின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டது. இருப்பினும், ஆணையர்கள் எழுப்பிய எந்தவொரு கவலைக்கும் அது பதிலளிக்கவில்லை அல்லது அக்கவலைகள் எவ்வாறு சரிசெய்யப்பட்டன என்பதையும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. குமாரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய நோட்டீஸ் அளிக்கவும் வியாழக்கிழமை அன்று எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு கடுமையான நிலையைச் சந்தித்து வரும் வேளையில் இந்த உரையாடல் நடந்துள்ளது. அக்கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றப் பிரிவுகள் பிளவுபட்டதைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் கட்சியின் சின்னம் மற்றும் பெயரைத் தேர்தல் ஆணையம் முடக்கியது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தேர்தல் ஆணையத்திற்குள் உள்ள பிளவுகள்; ஒன்றிணையும் பரம எதிரிகளான திரிணாமூல் காங்கிரஸ் - சி.பி.எம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk