தமிழ்நாடு காங்க்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோடிகளைக் கொட்டித் தீர்த்த வெற்று விளம்பரங்களால் கட்டமைக்கப்பட்ட போலி மாயையை, ஒன்றிய பாஜக அரசின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களே அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துக் காட்டுகின்றன! நாட்டின் உற்பத்தித் துறையை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சுக்குநூறாக்கிய இந்த 12 ஆண்டுகால மோசடி ஆட்சிக்கு இதோ ஆதாரப்பூர்வமான குற்றப்பத்திரிகை: இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக அரசு சூறையாடிவிட்டது! மோடி அரசின் கபட நாடகங்கள், அவர்கள் வெளியிடும் சொந்த அரசுத் தரவுகளாலேயே நாளுக்கு நாள் மக்கள் மன்றத்தில் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டு வருகின்றன. இனியாவது வெற்று விளம்பர மோகத்தை கைவிட்டுவிட்டு, நாட்டின் நலன் கருதி முறையான தொழிற்கொள்கைகளை வகுப்பதிலும், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும் மோடி அரசு உண்மையான அக்கறை செலுத்த வேண்டும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு: போல் வால்ட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் வாழ்த்து! “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கிறார் முதலமைச்சர் விஜய்!” – மு.க.ஸ்டாலின் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? 15 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
மோடி அரசின் நாடகங்கள், அவர்கள் வெளியிடும் தரவுகளாலேயே தோலுரிக்கப்படுகின்றன – மாணிக்கம் தாக்கூர்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk