ரயிலில் 40 பேர் கொண்ட குழு தொடர்ந்து 5 மணி நேரம் கூச்சலிட்டு இடையூறு விளைவித்ததாக கர்நாடக இசைக்கலைஞர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஆதங்கத்துடன் பதிவிட்ட எக்ஸ் பதிவு, இணையத்தில் 'பொது நாகரிகம்' குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் மனைவியுமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், தான் சமீபத்தில் மேற்கொண்ட ரயில் பயணத்தில் சந்தித்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Photograph: (சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் படம் ஏ.ஐ-யில் மேம்படுத்தப்பட்டது.) பொது இடங்களில் மக்கள் நடந்துகொள்ளும் விதம் மற்றும் பொது நாகரிகம் குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு பெரிய விவாதம் வெடித்துள்ளார். பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் மனைவியுமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், தான் சமீபத்தில் மேற்கொண்ட ரயில் பயணத்தில் சந்தித்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலில் நடந்தது என்ன? சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கூச்சல் போட்ட குழு: 56 இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் சுமார் 40 நடுத்தர வயது பயணிகள் ஒன்றாகப் பயணித்துள்ளனர். அவர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரத்த குரலில் பேசுவது, யு.என்.ஓ விளையாட்டு விளையாடுவது, பாலிவுட் பாடல்களை சத்தமாகப் பாடுவது என அந்த பெட்டியையே அதிர வைத்துள்ளனர். கண்டுகொள்ளாத டிக்கெட் பரிசோதகர்: இது குறித்து ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் (டி.டி.இ) புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. மாற்று இருக்கை இல்லை: ரயில் முழுமையாக நிரம்பியிருந்ததால் இருக்கையை மாற்றவும் முடியவில்லை. மற்ற பயணிகளும் அசௌகரியமாக உணர்ந்தபோதிலும், எவரும் தட்டிக்கேட்க முன்வரவில்லை. கலைஞர்களின் மனநிலை: "ஒரு கலைஞராக எங்கள் மனதில் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பொது இடங்களில் இருக்கும்போது மற்றவர்களின் தனிப்பட்ட இடைவெளியை மதித்து, சத்தமாகப் பேசாமல் அல்லது கூச்சலிடாமல் இருக்க வேண்டும் என்பதை மக்கள் உணராதது மிகுந்த மனவேதனையைளிக்கிறது" என அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். I had a traumatic train ride today. It is very sad to see how people do not respect public spaces enough. When we are in the public, we should not shout or even talk loudly and disrespect every individual’s personal space in Public. As artists, we have a 100 thoughts running. And… சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இன்று எனக்கு ஒரு கசப்பான/மன உளைச்சலளிக்கும் ரயில் பயணம் அமைந்தது. மக்கள் பொது இடங்களை போதுமான அளவிற்கு மதிப்பதில்லை என்பதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாம் ஒரு பொது இடத்தில் இருக்கும்போது, மற்றவர்களின் தனிப்பட்ட இடைவெளியைக் கெடுக்கும் வகையில் உரக்கப் பேசுவதோ அல்லது கூச்சலிடுவதோ கூடாது. கலைஞர்களாகிய எங்கள் மனதிற்குள் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்; அமைதியில்தான் நாங்கள் மிளிர்வோம். ஒரு பெரிய குழுவாக ரயிலில் பயணிக்கும்போது ஆரம்பத்தில் ஏற்படும் உற்சாகத்தை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், 56 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டியில், சுமார் 40 நடுத்தர வயதுடைய நபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, மற்றவர்களிடம் தொடர்ந்து 5 மணி நேரம் உரத்த குரலில் பேசுவதை கற்பனை செய்து பாருங்கள். இடைவிடாமல் பேசுகிறார்கள். இந்தியாவில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவர்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது. அந்த குழுவில் இல்லாத மீதமுள்ள 16 பேரும் அவர்களைப் பொறுத்துக்கொண்டே போக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதனால், நான் டிக்கெட் பரிசோதகரிடம் (டி.டி.இ) வேறு பெட்டியில் மாற்று இருக்கை கிடைக்குமா என்று கேட்டேன். அவரும் முயன்றார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரயில் முழுமையாக நிரம்பியிருந்ததால், நான் அதே பெட்டியில் வேறு இருக்கைக்கு மட்டுமே மாற முடிந்தது. திடீரென ஏற்கனவே இடைவிடாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்த 8 பேர் கொண்ட ஒரு குழு, யு.என்.ஓ விளையாட்டு விளையாடத் தொடங்கியது. மீண்டும் நான் டி.டி.இ-யிடம் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் அவர்களை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார், அவர்களும் உடனடியாக நிறுத்தினர். ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு, டி.டி.இ அவர்களிடம் மீண்டும் வந்து, கிண்டலாக, 'ஏன் சார் கலாட்டா பண்றீங்க?' என்று கேட்டார். அதற்கு அவர்களும் டி.டி.இ-யுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே, 'சார் நீங்களும் வாங்க, விளையாடலாம்' என்று கூறினர். எனவே, இங்கு யார் ஜெயித்தார்கள் என்பது கேள்வி அல்ல. நானும் அவர்களும் சேர்ந்து, இந்தியர்களாகிய நாம் அனைவரும் 'பொது நாகரிகம்' எனும் விளையாட்டில் தோற்றுவிட்டோம். ஒரு தேசமாக நம் பொது இடத்து நடத்தை எப்போதுதான் மேம்படும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் எழுந்த விமர்சனங்கள் - கமெண்ட்கள் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும், அதேசமயம் அரசியல் ரீதியாகவும் நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்: சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் கமெண்ட்கள்: ஒரு பயனர், "சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்திற்கு என்று தனித்துவமான அடையாளம் (இசைக்கலைஞர்) உள்ளது. அவரை வெறும் 'தேஜஸ்வி சூர்யாவின் மனைவி' என்று மட்டுமே ஏன் சுருக்கிப் பார்க்கிறீர்கள்?" என ஊடகங்களின் செய்தியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். பொது நாகரிகம் vs மகிழ்ச்சி: மற்றொரு பயனர்: அந்த பயணிகள் பாடி மகிழும் வீடியோவைப் பகிர்ந்து, "உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருப்பதாகவே தெரிகிறது" என ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். மற்றொரு தரப்பினர், "பொதுப் போக்குவரத்தில் மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் நடப்பதே அடிப்படை நாகரிகம்" என சிவஸ்ரீக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசியல் விமர்சனங்கள் மற்றும் காரசார கமெண்ட்கள்: மேலும், ஒரு பயனர்: "எம்.பி-யின் மனைவியே 'கடவுளே இந்த நாட்டைக் காப்பாற்று' என்கிறார். மக்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்றால்... உங்களுக்கு இன்னும் 10 சான்றுகள் தேவையா?" எனக் கிண்டலாகக் கேட்டுள்ளார். இன்னொரு பயனர், தேஜஸ்வி சூர்யாவின் பழைய கருத்துகளைக் குறிப்பிட்டு கடுமையான அரசியல் விமர்சன முன்வைத்துள்ளார். "இந்த ரயிலில் பயணித்த ஒருவராவது 'வளர்ச்சி' (Development) என்ற பெயரில் வாக்களித்திருப்பார்கள் என்று என்னால் பந்தயம் கட்ட முடியாது. மதம், சாதி, இலவசங்கள் போன்றவற்றுக்கே வாக்களித்தார்கள். இப்போது அதற்குரிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். பயணத்தை அனுபவியுங்கள்!" என நாட்டின் தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டி ஒரு பயனர் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ளார். தொடரும் விவாதம்: பொதுப் போக்குவரத்தில் பயணிகள் குழுவாகச் சேர்ந்து பாட்டுப் பாடி மகிழ்வது தவறா? அல்லது அது மற்ற பயணிகளின் அமைதியைக் கெடுக்கும் பொது நாகரிகமற்ற செயலா? என்ற விவாதம் தற்போது எக்ஸ் தளத்தில் தீயாகப் பரவி வருகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ரயிலில் 40 பேர் போட்ட கூச்சல், 5 மணி நேர சித்திரவதை; பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சிவஸ்ரீ வேதனை; எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk