வேற்றுக்கிரகத்தில் உயிர்கள் இருந்தால் அவை மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துமா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
வேற்றுக்கிரகத்தில் உயிர்கள் இருந்தால் அவை மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், designprojects/koto_feja/Kateryna Kon/Science Photo Library via Getty Images நாசாவின் 'பெர்சவரன்ஸ்' ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகிறது. நமது பூமியைப் போன்ற வளிமண்டலத்தைக் கொண்டிருக்கக்கூடிய கிரகங்களை வானியலாளர்கள் விண்வெளியில் தேடி வருகின்றனர். மேலும், நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள தொலைதூர கிரகங்களில் இருந்து வரக்கூடிய சமிக்ஞைகளையும் நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம். இந்தச் சிக்கலான அனைத்துப் பணிகளுக்கும் ஒரு பொதுவான நோக்கம் உள்ளது: பூமிக்கு அப்பால் உயிரினங்கள் வாழ முடியுமா அல்லது எப்போதாவது வாழ்ந்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதே அதுவாகும். பல பத்தாண்டுகளாக மனிதர்கள் நமது கிரகத்தைத் தாண்டி பிற இடங்களில் உயிர்களுக்கான அறிகுறிகளைத் தேடி வருகின்றனர். ஆனால், திரைப்படங்களில் நாம் பார்க்கும் பச்சை நிற வேற்றுக்கிரகவாசிகளைப் போல எந்தவொரு வேற்றுக்கிரக உயிரினமும் இருக்காது. உண்மையில், அவை நுண்ணுயிரிகளாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (இஎஸ்ஏ) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்த விண்வெளி உயிரியலாளரும் எழுத்தாளருமான மைக்கேலா முசிலோவா கூறுகிறார். ஆனால், விண்வெளியில் நுண்ணுயிர் உயிரினங்களை நாம் கண்டறிந்தால், அவற்றால் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படுமா? மேலும், நமது கிரகத்திலிருந்து வெகு தொலைவுக்குப் பயணிக்கும்போது, இந்த நுண்ணுயிரிகளை நாமே அறியாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்பவர்களாக இருக்க முடியுமா? பட மூலாதாரம், Nasa/JPL-Caltech/MSSS விண்வெளியின் கடுமையான சூழலைத் தாங்கி உயிர்வாழ பாக்டீரியா போன்ற எளிய உயிரினங்களுக்கே சாத்தியம் அதிகம் உள்ளது என்று பிபிசியின் 'கிரவுட்சயின்ஸ்' பாட்காஸ்ட்டில் முசிலோவா கூறுகிறார். பூமியில் காணப்படும் சில பாக்டீரியாக்கள் ஸ்போர் (spore) வடிவத்துக்கு மாறும் திறன் கொண்டவை என்பதால், அவற்றால் விண்வெளியில் நீண்ட காலம் உயிர்வாழ முடியும் என்று அவர் கூறுகிறார்- ஸ்போர் என்பது கதிர்வீச்சைத் தாங்கக்கூடிய ஒரு வகையான செயலற்ற நிலையாகும். "அவை செல்லுக்குள் இந்த தடிமனான பாதுகாப்பு ஓட்டை உருவாக்குகின்றன - டிஎன்ஏ மிகவும் இறுக்கமாக அடைக்கப்பட்டு, ஒருவகையில் சீட்பெல்ட் போல செயல்படும் சிறப்பு புரதங்களால் பாதுகாக்கப்படுகிறது," என்று அவர் விளக்குகிறார். "கதிர்வீச்சு டிஎன்ஏவை சிறிய துகள்களாக உடைக்கும் தன்மை கொண்டது என்பதால், அவை டிஎன்ஏவை உரிய இடத்தில் பிடித்து வைக்கின்றன." பாக்டீரியா ஸ்போர்கள் விண்வெளியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழும் சாத்தியம் இருப்பதாக சில கோட்பாடுகள் தெரிவிக்கின்றன என்று முசிலோவா கூறுகிறார். ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானிகள் இவற்றை நீண்ட காலமாகப் பரிசோதிக்கவில்லை என்பதால், இத்தகைய கோட்பாடுகள் அனுமான அளவிலேயே உள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார். End of அதிகம் படிக்கப்பட்டது விண்வெளியில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் உயிரினங்களை பூமிக்குக் கொண்டு வர முடியுமா என்பதையும், அவை ஏதேனும் வகையில் நமக்கு ஆபத்தானவையாக இருந்தால் நம்மை நோய்வாய்ப்படுத்துமா என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டியுள்ளது. இது பூமிக்கு மற்ற கோளிலிருந்து வரும் மாசுபாடு (backwards contamination) என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து பெறப்படும் மாதிரிகள் பூமியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து 'மிகவும் குறைவு' என்று நிபுணர் குழுக்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும், நாசா போன்ற விண்வெளி நிறுவனங்கள் இந்த அச்சுறுத்தலை 'மிகவும் தீவிரமாக' எடுத்துக்கொள்வதாக முசிலோவா கூறுகிறார். உதாரணமாக, தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்' (Mars Sample Return) திட்டத்தில் இதற்கான முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் இருந்தன. நாசாவும் இஎஸ்ஏ-வும் இணைந்து மேற்கொண்ட இந்தத் திட்டத்தின் மூலம், செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை முதல்முறையாக பூமிக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. பட மூலாதாரம், DrPixel via Getty Images "பூமியில் பிரத்யேக 'கட்டுப்பாட்டு ஆய்வகங்களை' அமைத்து, அங்கு இந்த மாதிரிகளை முதலில் சேமித்து, பிறகு பரிசோதிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்," என்று முசிலோவா குறிப்பிடுகிறார். இந்தத் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளில் ஒருவர் சில்வியோ சினிபால்டி ஆவார். இவர் இஎஸ்ஏ-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி. மாதிரிகள் மட்டுமே அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை என அவர் கூறுகிறார். "விண்கலத்தின் வெளிப்புறத்தில் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய துகள்கள் சென்றடைய வாய்ப்புள்ளதா என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம். அவை பூமியின் வளிமண்டலத்துக்கு அருகில்கூட செல்லக்கூடாது என்று நாங்கள் விரும்பினோம்," என்று சினிபால்டி விளக்குகிறார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு நுண்ணுயிரிகள் விண்வெளியில் உயிர்வாழ முடியும் என்றால், நாம் அவற்றை அங்கு எடுத்துச் செல்கிறோமா என்பதையும் சிந்திக்க வேண்டும் என, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் ஆய்வாளரும் முன்னாள் நாசா விண்வெளி வீரருமான கேட் ரூபின்ஸ் கூறுகிறார். மனிதர்கள் விண்வெளிக்குச் செல்லும்போது தவிர்க்க முடியாமல் நுண்ணுயிரிகளையும் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். மேலும், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணரும் தனித்துவமான திறன் நுண்ணுயிரிகளுக்கு உள்ளது என்று ரூபின்ஸ் குறிப்பிடுகிறார். "மன அழுத்தம் போன்ற விஷயங்களுக்கு அவை மிகவும் உணர்திறன் கொண்டவை. விண்வெளிப் பயணச் சூழலும், குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட சூழலும் அதிகளவு அழுத்தம் நிறைந்தவை," என்று அவர் கூறுகிறார். குறைந்த ஈர்ப்பு விசைக்கு உட்படுத்தப்பட்ட சில பாக்டீரியாக்களில், நோயை ஏற்படுத்தும் திறனுடன் தொடர்புடைய மரபணுக்கள் செயல்படத் தொடங்குவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. "இது சற்று கவலையளிக்கிறது... அவை சற்று அதிக நோய்க்கிருமித் தன்மை கொண்டவையாக மாறுகின்றன," என்று ரூபின்ஸ் குறிப்பிடுகிறார். விண்வெளிப் பயணம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் காட்டியுள்ளன. ஷிங்கிள்ஸ் (shingles) நோயுடன் தொடர்புடையவை உட்பட செயலற்ற நிலையில் இருந்த வைரஸ்கள், விண்வெளியில் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் செயல்படத் தொடங்கியதை நாசா கண்டறிந்துள்ளது. "இதன் பொருள் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்...அந்த வைரஸ் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கலாம்," என்று ரூபின்ஸ் கூறுகிறார். பட மூலாதாரம், Nasa via Getty Images நுண்ணுயிரிகளை விண்வெளிக்குக் கொண்டு செல்வது நம்முடைய அறிவியல் ஆய்வுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என முசிலோவா கூறுகிறார். ஏனெனில், நாம் ஆய்வு செய்ய விரும்பும் விஷயத்தையே நாமே மாசுபடுத்திவிடக்கூடும். "செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்போதாவது இருந்தனவா என்பதை ஆய்வு செய்யும் நோக்கில் பல்வேறு ஆய்வுக் கருவிகளை நாம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வருகிறோம்," என்று அவர் கூறுகிறார். "சில நுண்ணுயிரிகள் பூமியிலிருந்து செவ்வாய் வரை 'இலவசமாக பயணம் செய்து சென்றிருப்பது' கிட்டத்தட்ட உறுதி. ஒரு நாள் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களைக் கண்டுபிடித்தால், அது பூமியிலிருந்து வந்த மாசுபாடா என்பதை முதலில் நாம் உறுதி செய்ய வேண்டியிருக்கும்." இந்த ஆபத்தைக் குறைப்பது, 'பிற கோள்களில் நுண்ணுயிரிகள் பெருகுவதைத் தடுப்பதற்கும்' உதவும் என்று சினிபால்டி கூறுகிறார். விண்கலத்தின் வடிவமைப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இஎஸ்ஏ-வின் எக்ஸோமார்ஸ் ரோவரான 'ரோசலிண்ட் ஃபிராங்க்ளின்' 2028ஆம் ஆண்டு ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. மாசுபாட்டின் அபாயத்தைக் குறைக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இஎஸ்ஏ-வின் கூற்றுப்படி, அது மிகவும் தூய்மையான சூழலில் உருவாக்கப்பட்டது. உலர் வெப்பத்தின் மூலம் நுண்ணுயிரிகளைக் குறைக்கும் முறையும், புற ஊதா மற்றும் காமா கதிர்வீச்சும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைக்க முடியும். எனினும், அவற்றை முற்றிலும் அகற்ற முடியாது. "முழு ரோவரின் வெளிப்புறப் பரப்பிலும் 10,000-க்கும் குறைவான பாக்டீரியா ஸ்போர்கள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, ஒரு ஊசிமுனையின் எட்டில் ஒரு பங்கு அளவிலான பகுதியில் காணப்படும் எண்ணிக்கை அது," என்று எக்ஸோமார்ஸ் பொறியாளர் பால் மீச்சம் கூறுகிறார். "நாங்கள் உண்மையில் அந்த எண்ணிக்கையில் 10% மட்டுமே இருக்கும் அளவை எட்டினோம்," என்று அவர் கூறுகிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பூமியில் காணப்படும் சில நுண்ணுயிரிகள் நிலவின் தென் துருவப் பகுதியில் நிழலில் உள்ள சிறிய இடுக்குகளிலும் பிளவுகளிலும் உயிர்வாழக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். விண்வெளியில் நுண்ணுயிரிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த கண்டுபிடிப்புகள் எடுத்துரைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். விண்வெளியில் நுண்ணுயிரிகள் உயிர்வாழக்கூடியவை அல்லது அதிக நோய்க்கிருமித் தன்மை கொண்டவையாக மாறக்கூடியவை என்பதுடன், விண்வெளிப் பயணம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தக்கூடும் என்பதும் சேரும்போது, அவை விண்வெளி வீரர்களின் உடல்நலத்தையும் விண்வெளிப் பயணங்களின் வெற்றியையும் பாதிக்கக்கூடும். பூமியிலிருந்து நீண்ட காலத்துக்குப் பயணம் செய்ய மனிதர்கள் திட்டமிடும் நிலையில், இந்தப் பிரச்னைகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், மருத்துவ சிகிச்சைக்காக 24 மணி நேரத்துக்குள் அவரை பூமிக்குத் திருப்பி அனுப்ப முடியும். ஆனால் நிலவில் இருந்து திரும்புவதற்கு பல நாட்கள் ஆகும். "இது பெரிய விஷயமாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு தீவிரமான தொற்று ஏற்பட்டால், அது உண்மையில் ஒரு பிரச்னையாக இருக்கக்கூடும்," என்கிறார் ரூபின்ஸ். பிபிசி உலக சேவையின் கிரவுட்சயின்ஸ் நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்- டெய்சி ஸ்டீபன்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை