முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். பரணிகா இளங்கோவன் அவர்கள் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கிறார் முதலமைச்சர் விஜய்!” – மு.க.ஸ்டாலின் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? 15 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு! ராமாயணா படத்தின் முதல் தமிழ் பாடல் வெளியானது! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டு: போல் வால்ட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk