ரயில்வேயின் திறனை அதிகரிப்பதுடன், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் இயக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எழுதியவர் : அனிஷ் மொண்டல் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் ரூ.4,178.13 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 236 கி.மீ தொலைவை உள்ளடக்கிய இத்திட்டங்களில், தற்போதுள்ள ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல் மற்றும் 3-வது, 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க ரயில்வேயின் திறனை அதிகரிப்பதுடன், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் இயக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுமே தென்னக ரயில்வேயின் நிர்வாக வரம்பிற்குள் வருகின்றன. ரூ. 2,241.67 கோடியில் சேலம் - கரூர் - திண்டுக்கல் இருவழிப் பாதை திட்டம் 159 கி.மீ தொலைவு கொண்ட சேலம் - கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கு ரூ.2,241.67 கோடி செலவில் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு செப்டம்பர் 21 அன்று ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், "2026 - 27 ஒருங்கிணைந்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ், தென்னக ரயில்வேயின் சேலம் - கரூர் - திண்டுக்கல் இருவழிப் பாதை திட்டத்திற்கு ரூ. 2241.67 கோடி மதிப்பீட்டில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தின் கொள்ளளவை அதிகரித்து, நெரிசலைக் குறைக்க உதவும். பணிகள் நிறைவடைந்த பிறகு, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் தடையின்றி விரைவாக இயங்க வாய்ப்பு ஏற்படும். சேலம் - கரூர் - திண்டுக்கல் வழித்தடமானது எஃகு, சிமெண்ட், ஜவுளி, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற முக்கிய தொழில் மற்றும் விவசாயப் பகுதிகளுக்குச் சேவை வழங்குகிறது. இந்தப் புதிய ரயில் பாதை சரக்குப் போக்குவரத்து மற்றும் தளவாடப் பணிகளின் திறனை மேம்படுத்துவதோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இடையிலான ரயில் இணைப்பை மேலும் வலுப்படுத்தும்.ரூ. 1,936.46 கோடியில் அரக்கோணம் - ரேணிகுண்டா 3 மற்றும் 4-வது பாதை திட்டம், 77 கி.மீ தொலைவு கொண்ட அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் ரூ.1,936.46 கோடி செலவில் 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ரயில்வே வாரியம் செப்டம்பர் 21 அன்று எழுதிய கடிதத்தில், "ரயில்வே நெட்வொர்க்கின் திறனைப் பெருக்கும் நோக்கில், தென்னக ரயில்வேயின் அரக்கோணம் - ரேணிகுண்டா 3 மற்றும் 4-வது பாதை திட்டத்திற்கு ரூ. 1936.46 கோடி மதிப்பீட்டில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டு உள்ளது. இத்திட்டம் ரயில் பாதையின் திறனை அதிகரிக்கும், ரயில்கள் நேரத்திற்கு இயங்குவதை உறுதி செய்யும் மற்றும் அதிகரித்து வரும் சரக்கு சேவை தேவைகளுக்குப் பெரிதும் துணைபுரியும். தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியே செல்லக்கூடிய இந்தப் பாதை, 'மிஷன் 3000 எம்.டி' (Mission 3000 MT) மற்றும் அதிகப் போக்குவரத்து கொண்ட 'அம்ரித் சதுர்புஜ்' திட்டங்களின் ஒரு பகுதியாகும். அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடம் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களுக்கான இணைப்பையும் வழங்குகிறது. இதன் பலமுனைப் போக்குவரத்து இணைப்புகள் முக்கிய தொழில் மையங்களையும் போக்குவரத்துப் புள்ளிகளையும் இணைத்து, பயணிகள் மற்றும் சரக்குகளின் எளிதான போக்குவரத்திற்கு உதவுகின்றன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தென்னக ரயில்வேக்கு ரூ. 4,178 கோடி ஒதுக்கிய மத்திய அரசு; தமிழ்நாட்டின் 3 மாவட்ட மக்களுக்கு செம்ம ஜாக்பாட்
📅
📍 Salem, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk