ஞானேஷ் குமார்: எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் தலைமை தேர்தல் ஆணையரின் முழு பின்னணி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
ஞானேஷ் குமார்: எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் தலைமை தேர்தல் ஆணையரின் முழு பின்னணி

பட மூலாதாரம், ANI புதன்கிழமை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தின. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளின்போது, தேர்தல் ஆணையத்தின் இரு உறுப்பினர்களுக்கும் பல முக்கிய முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை என்றும், அவற்றுக்கு அவர்கள் பலமுறை ஆட்சேபனை தெரிவித்ததாகவும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் ரிதிகா சோப்ராவின் செய்தியில், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், கடந்த 10 மாதங்களில் ஆணையம் எடுத்த பல முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை அதிகாரபூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி தொடர்பாக தேர்தல் ஆணையமும் தனது விளக்கத்தை அளித்துள்ளது. பல உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அரசியலமைப்பு அமைப்பில் வெவ்வேறு கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் முன்வைக்கப்படுவது இயல்பான நடைமுறை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) உள்ளிட்ட கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட அனைத்து இறுதி முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவி வகித்த காலம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு அரசியல் விமர்சனங்களால் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான அவரது முடிவுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஞானேஷ் குமார் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற ஞானேஷ் குமாரின் பின்னணி என்ன? அவரது நிர்வாகப் பயணம் எப்படி அமைந்தது? அவரது பதவிக்காலத்தில் தேர்தல் ஆணையத்தில் என்னென்ன முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன? அவரைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஞானேஷ் குமார், 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றபோது, அவருடைய பணிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நடவடிக்கையிலும், ராமஜென்மபூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டதிலும் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஞானேஷ் குமார், 1988-ஆம் ஆண்டு கேரளா பிரிவைச் (cadre) சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மத்திய கூட்டுறவுத் துறைச் செயலாளர் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கீழ் செயல்படும் இந்த அமைச்சகத்தில், 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் செயலாளராகப் பணியாற்றினார். இதையடுத்து, 2024ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தேர்தல் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார். மறுநாள், மார்ச் 15ஆம் தேதி அவர் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த நாளே, மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள், அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு, அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு 2016ஆம் ஆண்டு மே முதல் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் வரை இணைச் செயலாளராகவும், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கூடுதல் செயலாளராகவும் பதவி வகித்தார். அவரது நிர்வாகப் பயணத்தில், உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சகங்களில் வகித்த பொறுப்புகள் முக்கியமானவை. பட மூலாதாரம், ANI கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், ஞானேஷ் குமார் ஜம்மு-காஷ்மீர் விவகாரங்களைக் கவனித்து வந்தார். அப்போதுதான், 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தது. 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியின்படி, 370-வது பிரிவின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, ஞானேஷ் குமார் அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வந்து சென்றார். ஆங்கில நாளிதழான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட செய்தியின்படி, நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம் ஞானேஷ் குமார் மீது வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளில் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவைத் தயாரிக்கும் பணியில் அவர் முக்கியப் பங்கு வகித்ததாகவும், 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா' அறக்கட்டளையை அமைப்பதிலும் அவர் பங்களித்ததாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. அதே செய்தியின்படி, அவர் கூட்டுறவுத் துறைச் செயலாளராக இருந்த காலத்தில், கூட்டுறவுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் அதிகரிக்கும் நோக்கில் 'பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) மசோதா, 2023' நிறைவேற்றப்பட்டது. ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில்தான் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மேலும், 370-வது பிரிவின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதுதவிர, ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் 2029ஆம் ஆண்டு ஜனவரி 26 வரை நீடிக்கிறது. அவரது பதவிக்காலத்தில் 20 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களுக்கான பணிகளும், 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளும் அவரது பதவிக்காலத்திலேயே மேற்கொள்ளப்பட உள்ளன. ஞானேஷ் குமார், ஐஐடி கான்பூரில் சிவில் பொறியியல் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர். மேலும், இந்திய பட்டய நிதிப் பகுப்பாய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி மேலாண்மை படிப்பையும் முடித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸின் மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்வதற்காக மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு கொண்டு வந்த புதிய சட்டமான 'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்ட'த்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அடுத்த விசாரணை பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வது தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தேர்வுக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கோர வேண்டும். இதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும். மத்திய அரசு தனது அகந்தையைக் கைவிட்டு இந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டும்." என கூறினார். அப்போது நடைமுறையில் இருந்த 2023-ஆம் ஆண்டு சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர் தலைவராகவும், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினர்களாகவும் இடம்பெற்றிருந்தனர். அந்த நேரத்தில் குழுவில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் புதிய நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், நியமனத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி குழுக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவித்தார். அவரது ஆட்சேபனை கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. எனினும், காங்கிரஸின் ஆட்சேபனையை ஏற்காமல் தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு ஞானேஷ் குமார் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம், ANI தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டம், 2023-ன் கீழ் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு, 2024-ஆம் ஆண்டில் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இதே புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமித்து வந்தார். தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்திருந்தது. நாடாளுமன்றம் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றியது. அதில், தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் இந்தியத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சரை உறுப்பினராகச் சேர்த்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை