ஐபோன் 18 ப்ரோ மாடல் விலை இந்தியாவை ஒப்பிடும்போது, துபாயில் எதிர்பாராத வகையில் விலை குறைவாக இருப்பதால் இந்தியர்கள் துபாய் நாட்டிற்கு படையெடுத்து செல்கின்றனர்.. ஐபோன் 18 ப்ரோ மாடல் அங்கு என்ன விலைக்கு விற்கப்படுகிறது.. இந்தியாவில் அதனுடைய விலை என்ன விரிவாக பார்க்கலாம்.. இந்தியர்கள் பெரும்பாலும், எந்தவொரு பொருளையும் அவ்வளவு சாதாரணமாகத் தேர்வு செய்துவிடுவதில்லை. உதாரணத்திற்கு ஒரு ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுக்கும்போது, அதுகுறித்த பயன்பாடுகள், விலை எனப் பலவற்றைக் கவனமாகப் பார்த்தபிறகே தேர்வு செய்கின்றனர். அப்படியிருக்கையில், ஐபோனை மட்டும் அவ்வளவு சுலபத்தில் வாங்கி விடுவார்களா என்ன? முதலில், புதிய ஐபோன் வாங்குவது குறித்து நண்பர்களிடம் விசாரிப்பார்கள்; அடுத்து, ஆன்லைன் விற்பனையை ஆய்வு செய்வார்கள். அதற்கடுத்து ஆப்பிள் ஸ்டோருக்குச் சென்று அங்கேயும் விசாரிப்பார்கள். அதன்பிறகே, ஒரு முடிவுக்கு வருவார்கள். இந்த நிலையில்தான் ஐபோன்களின் மாடல்கள் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களுடன் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை வாங்குவதற்காக அவர்கள் துபாய்க்குப் பறக்கிறார்கள். ஏனெனில், இந்தியாவுடனான விலை வித்தியாசம் அதற்கு நேர்மாறாக உள்ளது. சில சமயங்களில், விமானப் பயணச் செலவு மற்றும் விசா கட்டணத்தைச் சேர்த்த பிறகும்கூட, துபாயில் வாங்குவது மலிவாகவே இருக்கும் என்று வாங்குபவர்கள் நினைக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆப்பிளின் ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை திர்ஹாம் 5,099 ஆகும். சமீபத்திய மாற்று விகிதங்களின்படி, இதன் விலை தோராயமாக ரூ. 1.32 லட்சம் முதல் ரூ. 1.33 லட்சம் வரை ஆகும். ஆனால் இந்தியாவில், அதே ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகும். இது, பயணம் மற்றும் இதர செலவுகளுக்கு மத்தியில் சுமார் ரூ. 33,000 வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலை திர்ஹாம் 5,499 ஆகும், இது தோராயமாக ரூ. 1.42 லட்சம் முதல் ரூ. 1.44 லட்சம் வரை ஆகும். இந்தியாவில், இதன் ஆரம்ப விலை ரூ. 1,79,900 ஆகும். இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சுமார் ரூ. 38,000 ஆகும். இதன் காரணமாகவே, அவர்கள் துபாய்க்குப் பறக்கிறார்கள். துபாயில் இப்படி விலை குறைவதற்குக் காரணம் மதிப்புக் கூட்டுவரியே ஆகும். ஐக்கிய அரபு அமீரகம் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி (VAT) முறையைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு வேறுபட்ட வரி மற்றும் இறக்குமதி வரி அமைப்பு உள்ளது. இதுவே இறுதி சில்லறை விலையைப் பாதிக்கிறது.
'இவ்வளவு கம்மியா தர்றாங்களா..' ஐபோன் விலையில் அதிரடி மாற்றம்.. இந்தியர்களை இழுக்கும் துபாய்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk