இந்தியர் ஒருவர் 11 ஆண்டுகளில் தொழிலதிபராக மாறி, சொந்தமாக 3 உணவகங்கள், சொகுசு பி.எம்.டபிள்யூ கார், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் சொந்த வீடு என உயர்ந்துள்ளார். உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் சொந்த நாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை, உலகின் எந்த மூலையிலும் கொடி நாட்டி ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் ஒரு இந்திய இளைஞர். 6 மடங்கு உறுதி: கடப்பாறை கொண்டு அடித்தாலும் உடையாத வைரம்; கான்கிரீட் கம்பியை போல படு ஸ்ட்ராங் படிக்காக ஆஸ்திரேலியா சென்று, சரியான வேலை கிடைக்காமல் பீட்சா கடையில் டெலிவரி பாயாகச் சேர்ந்த ஒரு இளைஞர், வெறும் 11 ஆண்டுகளில் தொழிலதிபராக மாறி, சொந்தமாக 3 உணவகங்கள், சொகுசு பி.எம்.டபிள்யூ கார், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் சொந்த வீடு என உயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது இந்த உத்வேகமான பயணத்தை, தொழில்முனைவோரான அவரது உறவினர் வினீத் என்பவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். டெலிவரி பாயாகத் தொடங்கிய வாழ்க்கைப் பயணம் 11 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கல்விக்காக ஹைதராபாத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்றார் அந்த இளைஞர். படிப்பு முடிந்தும் அவரது துறை சார்ந்த வேலை கிடைக்காததால், வாழ்வாதாரத்திற்காக ஒரு பீட்சா கடையில் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். அங்கு வாடிக்கையாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று பீட்சா டெலிவரி செய்யும் வேலையையும் செய்தார். கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தை சிறுக சிறுக சேமித்தவர், அடுத்த 3 ஆண்டுகளில் பார்ட்னர்ஷிப் உடன் நிதி திரட்டி, அதே பீட்சா கடையின் ஃபிரான்சைஸை விலைக்கு வாங்கினார். 3 உணவகங்கள், பி.எம்.டபிள்யூ கார், சொந்த வீடு கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா வந்த அவர் திருமணம் செய்துகொண்டு தனது மனைவியை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றார். அவரது முதல் உணவகம் நல்ல லாபம் ஈட்டவே, அடுத்தடுத்து மேலும் 2 ஃபிரான்ச்சைஸ்களை வாங்கினார். இன்று ஆஸ்திரேலியாவில் 3 உணவகங்களின் முதலாளியாக இருக்கும் அவர், ஆஸ்திரேலியாவில் சொந்த வீடு மற்றும் பி.எம்.டபிள்யூ காரையும் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, சொந்த ஊரான ஹைதராபாத்திலும் பிரமாண்ட வீடு கட்டி, தனது பெற்றோரையும் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்று அழகு பார்த்துள்ளார். இத்தனை கடின உழைப்பிற்கு பிறகு, இந்த வாரம் அவருக்கு ஆஸ்திரேலியக் குடியுரிமையும் கிடைத்துள்ளது. இணையவாசிகளின் வாழ்த்து மழை இந்த கதையை பகிர்ந்த வினீத், "ஆரம்ப நாட்களில் இரவும் பகலும் பாராமல் பீட்சா டெலிவரி செய்தார். அவரது இந்த அசாத்திய வளர்ச்சியையும் வெற்றியையும் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், "கல்வித் தகுதியை விட கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான் ஒருவரை உயர்த்தும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்", "உழைப்புக்கேற்ற ஊதியமும், முன்னேற வாய்ப்புகளும் தரும் நாடுகளால் மட்டுமே இது சாத்தியம்" என பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஆரம்பத்துல பீட்சா டெலிவரி பாய் தான்; இப்ப 2 வீடு, 3 ஹோட்டலுக்கு சொந்தக்காரர்: ஆஸ்திரேலியாவை மிரட்டிய இந்தியர்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk