துபாய் மன்னரின் சகோதரர் மரணம்.. அதிர்ச்சியடைந்த உலக நாடுகள்.. நடந்தது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
துபாய் மன்னரின் சகோதரர் மரணம்.. அதிர்ச்சியடைந்த உலக நாடுகள்.. நடந்தது என்ன?

செய்தியாளர் - கார்த்திகேயன் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறைதான் உள்ளது. இருப்பினும், இறையான்மை கொண்ட 43 நாடுகளில், இன்னும் மன்னர் ஆட்சி நடைமுறையில் இருந்துகொண்டுதான் உள்ளது. சவூதி அரேபியா, ஓமன், புருனே, சுவாசிலாந்து போன்ற நாடுகளில், இன்னும் மன்னராட்சிதான் இருந்து வருகிறது. மன்னர் குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்துவிட்டால், அந்த நாடுகளில், துக்கம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னரின் சகோதரர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமதுவின் இளைய சகோதரர்தான் ஷேக் அகமது மக்தூம். துபாய் காவல் மற்றும் பொது பாதுகாப்புத் துறையின் துணை தலைவராகப் பதவி வகித்து வந்த ஷேக் அகமது, இன்று (செப்.21) காலை உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, துபாயில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. ஷேக் அகமதுவின் இறப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், நாட்டில் உள்ள அனைத்து தேசியக் கொடிகளும், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, துபாய் மன்னர் வெளியிட்டுள்ள பதிவில், ’எனது சகோதரர் மீது இறைவன் கருணை காட்டட்டும். இறைவன் அவர் மீது கருணையை பொழிவான். அவர் இப்போது சர்வ வல்லமையுள்ள இறைவனின் மடியில் இருக்கிறார். அவர் எங்கள் பார்வையைவிட்டு மறைந்துவிட்டாலும், எங்கள் பிரார்த்தனைகளிலும் இதயங்களிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை