நீங்கள் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நீங்கள் கோடீஸ்வரர் ஆனால் எப்படி இருக்கும் என்று நினைத்தது உண்டா? இந்த சம்பவம் உண்மையாகவே நடந்துள்ளது. தினசரி நடைப்பயிற்சியின் போது தரையில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருக்கும் ஒரு பழைய துருப்பிடித்த பெட்டியைப் பார்த்தால், பெரும்பாலானோர் அதை வெறும் குப்பை என்று கடந்து போய்விடுவார்கள். ஆனால், அந்தப் பெட்டியைச் சற்று ஆழமாக தோண்டிப் பார்த்த ஒரு தம்பதிக்கு, தங்கள் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ஷ்டம் காத்திருந்தது. பூமிக்கு அடியில் 4,500 வருட ரகசிய பாதை: எதிரிகளை லாக் செய்ய சீனா போட்ட பிளான்; இவ்வளவு பெரிய டெக்னாலஜியா? வடக்கு கலிபோர்னியாவின் கிராமப்புற கோல்ட் கண்ட்ரி (Gold Country) பகுதியில், தங்களது 200 ஏக்கர் பண்ணை நிலத்தில் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட தம்பதிக்குத் தான் இந்த மாபெரும் புதையல் கிடைத்தது. மண்ணுக்குள் புதைந்திருந்த 8 இரும்புப் பெட்டிகள் ஆரம்பத்தில் ஒரு பெட்டியை கண்டெடுத்த அந்தத் தம்பதி, சந்தேகமடைந்து சுற்றியிருந்த நிலத்தைத் தோண்டிப் பார்த்தனர். அப்போது ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 8 துருப்பிடித்த இரும்புப் பெட்டிகள் வெளிவந்தன. அந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது, அவற்றில் 1,427 அரிதான வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த கண்டுபிடிப்புக்கு 'சாடில் ரிட்ஜ் புதையல்' (Saddle Ridge Hoard) என்று பெயரிடப்பட்டது. நாணயங்களின் சிறப்பு மற்றும் காலகட்டம் இந்தப் பெட்டிகளில் இருந்த நாணயங்கள் அனைத்தும் 1847 முதல் 1894 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. அதாவது, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்து கிடந்துள்ளன. இதில் 1,373 நாணயங்கள் 20 டாலர் மதிப்பு கொண்ட 'டபுள் ஈகிள்ஸ்' (Double Eagles) ரகத்தைச் சேர்ந்தவை. மேலும், 50 நாணயங்கள் 10 டாலர் மதிப்பிலும், 4 நாணயங்கள் 5 டாலர் மதிப்பிலும் இருந்தன. நாணயங்கள் அனைத்தும் சான் பிரான்சிஸ்கோ நாணயச்சாலையால் (San Francisco Mint) வெளியிடப்பட்டவை. பெட்டிகளுக்குள் இவை கண்டபடி போடப்படாமல், மிகக் கச்சிதமாகக் காலவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவிழ்க்கப்படாத மாபெரும் மர்மம் நாணயங்கள் காலவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருந்த விதத்தைப் பார்த்த நிபுணர்கள், இது ஒரே நாளில் கொள்ளையடிக்கப்பட்ட பணமாக இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறுகின்றனர். வங்கி அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லாத அன்றைய காலத்து பணக்காரர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பைத் தங்க நாணயங்களாக மாற்றி, சிறுகச் சிறுக இந்த நிலத்தில் புதைத்து வைத்திருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், அந்த நபர் யார்? ஏன் இந்தச் செல்வத்தை மீண்டும் எடுக்கவே இல்லை? என்பது இன்னமும் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது. சந்தை மதிப்பு ரூ.90 கோடி இந்தப் புதையலில் உள்ள நாணயங்களின் அதிகாரப்பூர்வ முக மதிப்பு வெறும் 27,980 டாலர் தான். ஆனால், இத்தனை ஆண்டுகள் மண்ணில் இருந்தும் இவை புத்தம் புதிய நாணயங்கள் போல மிகச் சிறந்த நிலையில் இருந்தன. நாணயங்களின் அரிய தன்மை மற்றும் பழமையைக் கணக்கிட்டு, இதன் தற்போதைய சந்தை மதிப்பு 10 முதல் 11 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.85 முதல் ரூ.90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்த '1866-S No Motto Double Eagle' என்ற ஒரே ஒரு அரிய நாணயத்தின் மதிப்பு மட்டுமே 1 மில்லியன் டாலர், சுமார் ரூ. 8.3 கோடி ஆகும். பழைய நாணயங்களின் மதிப்பு அவற்றின் தங்க எடையில் மட்டுமல்ல, அவற்றின் வரலாறு மற்றும் அரிதான தன்மையில்தான் இருக்கிறது என்பதற்கு இந்தச் 'சாடில் ரிட்ஜ் புதையல்' ஒரு சிறந்த உதாரணமாகும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
லாட்டரி அடிக்கல; நாயுடன் வாக்கிங் போன அடுத்த நொடி கோடீஸ்வரரான தம்பதி: எப்படி தெரியுமா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk