’Sigma’ வெளியானதும் விஜய் மகன் என்ற பேச்சு மாறுமா? ஜேசன் சஞ்சய் சொன்னது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
’Sigma’ வெளியானதும் விஜய் மகன் என்ற பேச்சு மாறுமா? ஜேசன் சஞ்சய் சொன்னது என்ன?

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகனாக இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், ‘Sigma’ மூலம் தன் சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக கூறுகிறார். குடும்பப் பாரம்பரியத்தை மறுக்காமல், படைப்பின் தரம் மூலமே தன்னை மதிப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறார். படம் தொடங்கி சில நிமிடங்களில் ரசிகர்கள் குடும்பப் பின்னணியை விட இயக்குநராக அவரை கவனிப்பார்கள் என நம்புகிறார். செய்தியாளர் - M.மீரா தமிழக முதலமைச்சரின் விஜய்யின் மகன் என்ற அடையாளத்துடன் திரையுலகில் அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். தனது திரைப்படப் பயணத்தில் குடும்பப் பின்னணி குறித்த எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இருப்பினும், தனது முதல் படமான ‘Sigma’ மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜேசன் சஞ்சய்யிடம், ரசிகர்கள் அவரை தமிழக முதலமைச்சரின் மகனாகவா, சூப்பர் ஸ்டார் விஜய்யின் மகனாகவா அல்லது இயக்குநர் ஜேசன் சஞ்சய்யாகவா எப்படி பார்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தனது குடும்பத்தின் அடையாளத்தை மறுக்க முடியாது என்று கூறினார். தான் உருவாக்கும் படைப்பின் மூலமாக தனக்கான இடத்தைப் பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். #Baradwaj: How do people look at you. As CM's son or a Superstar's son or JasonSanjay as Director❓#JasonSanjay: I think about it all the time. Obviously my family legacy is going to continue forever. Also the political change that is taking place off late. Another side I'm… எனது குடும்பத்தின் அடையாளம் எப்போதும் இருக்கும். அதே நேரத்தில், நான் எனது சொந்த உலகத்தில் எனது படத்தை உருவாக்கி வருகிறேன். திரையுலகில் எனது சொந்த அடையாளத்தை உருவாக்குவதும், எனது பார்வையை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுமே எனது நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும், ‘Sigma’ படத்தை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தனது குடும்ப அடையாளத்தை விட படத்தின் மீதே அவர்களின் கவனம் செல்லும் என்று ஜேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம் தொடங்கி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ‘Directed by Jason Sanjay’ யின் ஒரு திரைப்படமாகவே அதை பார்ப்பார்கள். படத்திற்கு கிடைக்கும் விமர்சனங்கள் நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும், அந்தப் படைப்புதான் நான் யார் என்பதை சொல்லும் என அவர் தெரிவித்துள்ளார். Q: What quality of your father would you want to explore as a director..❓#JasonSanjay : I think his sense of humour.. It’s something I really enjoy watching him do. He feels very let loose and is being himself. I’ve seen that personal side of him at home while growing up, so I… படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றி மற்றும் அனுபவத்தை பயன்படுத்தி தனது இயக்குநர் பயணத்தை தொடர்ந்து வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யை இயக்க வேண்டும் என்ற ஆசை தனது தந்தை விஜய்யின் நகைச்சுவை உணர்வும், இயல்பாகவும் குழந்தைத்தனமான உற்சாகத்துடனும் இருக்கும் தனிப்பட்ட பக்கமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். விஜய் தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுடன் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக ஜேசன் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால், விஜய்யின் அந்த இயல்பான மற்றும் ரசிகர்களுக்கு நெருக்கமான நடிப்பை வெளிக்கொண்டு வர விரும்புவதாகவும் அவர் கூறினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை