கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் களப்பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். PMJAY / ABDM Field Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவினைப் பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.10.2026 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,500 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2026/09/17890393775486.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: மருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அரசு மருத்துவமனை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk