சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய விண்கல் மூலம் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. இது டைனோசர்களை முற்றிலுமாக அழித்ததுடன், பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மாற்றி அமைத்தது. ஸ்பைடர் மேன் மாதிரி பறக்கும் வௌவால்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா? (Image: AI) மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பூமி முழுவதும் ஒரு பெரிய பேரழிவு வெடித்தது. கோடானுகோடி ஆண்டுகளாக பூமியை ஆட்சி செய்து வந்த டைனோசர்கள், ஒரு விண்கல் வீழ்ச்சியால் முற்றிலுமாக அழிந்து சாம்பலாகின. அந்த பெரிய அழிவிலிருந்து பூமி மெல்ல மீண்டு வந்த காலகட்டம் அது. பூமியின் சுவடுகளும், மரபணு ரகசியங்களும் இப்போது ஒரு வியக்கத்தக்க கதையை நம்மிடம் சொல்கின்றன. அப்போதுதான், மர்மமான முறையில் வாழ்ந்த சிறு பாலூட்டிகளின் கூட்டத்திலிருந்து ஒரு விசித்திரமான இனம் ஐரோப்பாவின் காடுகளில் தோன்றியது. அவையே இன்றைய வவ்வால்களின் முன்னோர்கள்! சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவில் வவ்வால்கள் முதல்முறையாகத் காலடி வைத்தன. ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது வட அமெரிக்காவில் வௌவால்கள் தோன்றியிருக்கலாம் என்ற பழைய நம்பிக்கைகளை இந்த புதிய ஆய்வு முற்றிலும் மாற்றி எழுதியுள்ளது. மரபணுத் தரவுகளையும் தொல்லுயிர் எச்சங்களையும் இணைத்து விஞ்ஞானிகள் உருவாக்கிய துல்லியமான குடும்ப மரம், ஐரோப்பாதான் வவ்வால்களின் உண்மையான பிறந்தகம் என்று சுட்டிக்காட்டுகிறது. பாலூட்டி இனங்களிலேயே தானாகப் பறக்கும் திறன் (Powered flight) பெற்ற ஒரே விலங்கு வவ்வால் தான்! பறவைகளைப் போல இறக்கைகள் இல்லாமல், நீண்ட விரல்களும் அவற்றைத் தாங்கும் மெல்லிய தோல் சவ்வும்கொண்ட வித்தியாசமான கைகளை அவை கொண்டுள்ளன. முதல் வவ்வால் எப்படி இருந்தது? விஞ்ஞானிகளிடம் சுமார் 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வவ்வால் தொல்லுயிர் எச்சங்கள் உள்ளன. ஆனால், அதற்கும் முந்திய காலகட்டத்திற்கும் இடைப்பட்ட கால இடைவெளி இன்னும் ஒரு புதிராகவே நீடிக்கிறது. முதல் வவ்வால்கள் பார்க்க எப்படி இருந்திருக்கும்? டப்ளின் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பேராசிரியரான எம்மா டீலிங் கூறுகையில், "அவை நீண்ட விரல்களை வளர்க்கத் தொடங்கிய மரப்பல்லிகளைப் (Tree shrews) போல தோற்றமளித்திருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட பழமையான தொல்லுயிர் எச்சங்கள் எல்லாமே நவீன வௌவால்களைப் போலத்தான் இருக்கின்றன" என்கிறார். இருட்டில் பார்க்கக் கற்றுக்கொண்ட ரகசியம் வவ்வால்களைப் பற்றிய மிகப்பெரிய வியப்பு அவற்றின் எதிரொலி மூலம் இடமறியும் திறன் (Echolocation) ஆகும். அதாவது, கண்களுக்குப் புலப்படாத காரிருளிலும், தாங்கள் எழுப்பும் உயர் அதிர்வெண் ஒலிகளின் எதிரொலைக் கொண்டு வழியைக் கண்டுபிடித்து இரையைப் பிடிக்கும் அற்புதம் அது! இந்தத் திறன் பறப்பதைப் போலவே வவ்வால் பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்திலிருந்தே அவர்களுடன் இணைந்து வளர்ந்துள்ளது. ஆனால், பறக்கும் திறன் முதலில் வந்ததா அல்லது எதிரொலிக்கும் திறன் முதலில் வந்ததா என்பது இன்றும் விடைதெரியாத ரகசியமாகவே உள்ளது. இந்த அற்புதக் கலவை குறித்து உயிரியல் பேராசிரியர் சோன்ஜா வெர்ன்ஸ் அழகாகக் கூறுகிறார்: "பறக்கும் திறன் வவ்வால்களை வானத்தில் பறக்கச் செய்தது; ஆனால் எதிரொலிக்கும் திறன் தான் அவற்றை இரவின் முழு ஆளுமைமிக்க ராஜாவாக மாற்றியது!" Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
டைனோசர்கள் அழிவுக்குப் பின் பிறந்த வவ்வால்கள்: 65 மில்லியன் ஆண்டு கால ரகசியம் உடைப்பு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk