தியேட்டரில் அடித்து நொறுக்கும் ’மண்டாடி’.. சூரியை அழைத்து வாழ்த்திய கமல்ஹாசன்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
தியேட்டரில் அடித்து நொறுக்கும் ’மண்டாடி’.. சூரியை அழைத்து வாழ்த்திய கமல்ஹாசன்!

‘மண்டாடி’ வெற்றியை முன்னிட்டு, 100 கோடி வசூல் சாதனை படைத்த சூரி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பை வாழ்வின் மறக்க முடியாத தருணம் என சூரி எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கமலின் நிபந்தனையற்ற அன்பு, வலிமையான வார்த்தைகள், ஆசீர்வாதங்கள் தனது சினிமா பயணத்துக்கு புதிய நம்பிக்கையும் வெளிச்சமும் தந்ததாக சூரி கூறியுள்ளார். மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ’மண்டாடி’ திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கை, படகுப்போட்டி, கடல் விளையாட்டு ஆகியவற்றை மையமாகக் கொண்டு வெளியானது. ஜிவி பிரகாஷ் இசை, கேமரா ஒர்க், விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக பெருவாரியான ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடிவருகின்றனர். ஸ்போர்ட்ஸ் டிராமாவாக களம்கண்ட மண்டாடி சூரியின் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் திரைப்படமாக மாறியுள்ளது. இதற்குபிறகு சூரியை ‘மண்டாடி சூரி’ என்று அழைத்தாலும் மிகைப்படுத்துவதற்கில்லை. அந்தவகையில் 100 கோடி வசூலை குவித்திருக்கும் படம் மிரட்டி வருகிறது. வசூலை கடந்து விமர்சன ரீதியாகவும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தசூழலில் தான் சூரி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அந்த தருணத்தை சூரி நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனை சந்தித்த தருணம் தனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பதிவில், “என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. கமல் ஹாசன் சார், உங்களின் நிபந்தனையற்ற அன்பு, வலிமையான வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்கள், எங்களது ‘மண்டாடி’ திரைப்படப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது” என தெரிவித்துள்ளார். One of the most unforgettable moments of my life! ❤️🙏😍Dr. Kamal Haasan sir, your unconditional love, powerful words and blessings made our #Mandaadi journey even more special. Heartfelt thanks to Mahendran annae and Disney brother for making this beautiful moment possible. 🙏… pic.twitter.com/paG4ypz3wX மேலும், இந்த அழகான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த மகேந்திரன் அண்ணே மற்றும் டிஸ்னி சகோதரருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள சூரி, “கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும் புதிய வெளிச்சமும். ‘மண்டாடி’ குறித்து அவர் பகிர்ந்த பார்வை வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்” என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனுடனான சந்திப்பு மற்றும் அவரது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட நடிகர் சூரியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை