இஸ்ரேலுக்கு உச்சகட்ட அவமானம் : ஒரே நொடியில் ஆவேசமான நெதன்யாகு.. நடந்தது என்ன ?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
இஸ்ரேலுக்கு உச்சகட்ட அவமானம் : ஒரே நொடியில் ஆவேசமான நெதன்யாகு.. நடந்தது என்ன ?

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்த நிலையில், நியூயார்க் ஐ.நா. பொதுச்சபையில் நெதன்யாகு உரையாற்றும் போது பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிநடப்பு செய்தன. இதனால் இஸ்ரேலுக்கு கடும் அவமானம் ஏற்பட்டது. கோபமடைந்த நெதன்யாகு, அரங்கில் இருந்தவர்களையே தார்மீகக் கோழைகள் என சாடி, வெளியேறச் சவால் விட்டார். கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் வெடித்த நிலையில், தற்போதுவரை அது முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் படைகள் ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காசா நகரில் நுழைந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது. பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காசா பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நாடுகள் கூட இஸ்ரேலின் இந்த செயலுக்கு பின்னர் அந்த நாட்டுக்கு எதிராக திருப்பியுள்ளன. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் உரையாற்ற அழைக்கப்பட்டபோதே கூட்ட அரங்கில் இருந்து பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ய தொடங்கினர். மேலும் சில நாடுகளின் பிரதிநிதிகள் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். Delegates at the UN General Assembly in New York walk out as Israeli Prime Minister Benjamin Netanyahu arrives to deliver a speech.He responds by calling them "moral cowards".https://t.co/PAiZ4D1jU3📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/M0rn4B4mgs இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பெஞ்சமின் நெதன்யாகு, அரங்க மேடையிலேயே அரங்கில் இருந்து வெளியேறியவர்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்த அரங்கிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் தார்மீகக் கோழைகள் யாரேனும் இருந்தால், தயவுசெய்து இப்போதே வெளியேறுங்கள் என்றும் அவர் காட்டமான கருத்துக்களை தெரிவித்தார். ஐ.நா அவையில் ஒரு நாட்டின் தலைவர் உரையாற்றும்போது பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறுவது அந்த நாட்டுக்கு பெரும் அவமானமான செயலாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை