ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதில் அரசு இயந்திரத்தின் பங்கு மட்டும் போதாது; அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் முழு ஒத்துழைப்பும் அவசியமானதாகும் கோவை: ஊழலை ஒழிக்க அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம் - தவெக மகேந்திரன் பேச்சு தமிழக அலுவலர் ஆசிரியர் தொழிலாளர் சங்கத்தின் சங்கமம் விழா கோவையில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மை செய்தித் தொடர்பாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச்சங்கத்தின் கோவை மண்டலம் சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மாநிலத் தலைவர் ஜெ. ரஜனிராதிகா, மாநில முதன்மைச் செயலாளர் ச. தியாகராசன், மாநில பொதுச்செயலாளர் சுந்தரவளவன் மற்றும் தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன், ”ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதில் அரசு இயந்திரத்தின் பங்கு மட்டும் போதாது; அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் முழு ஒத்துழைப்பும் அவசியமானதாகும். அரசுடன் இணைந்து பணியாளர்களும் மக்களுக்கான நல்லதொரு ஆட்சியை உருவாக்க வேண்டும். சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற விளிம்புநிலை தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்றனர். மனிதர்கள் கண்ணியத்துடன் வாழத் தேவையான குறைந்தபட்ச ஊதியம் அவர்களுக்குக் கிடைப்பதுடன், பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய வேறுபாடுகளும் களையப்பட வேண்டும். அரசின் கவனத்திற்கு அனைத்துப் பிரச்சினைகளும் நேரடியாகச் செல்வதில்லை. சில நேரங்களில் அதிகாரிகள் மட்டத்தில் கோரிக்கைகள் தடுக்கப்படலாம். எனவே, எளிய மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதே இச்சங்கத்தின் முதன்மை நோக்கமாகும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் தொடர்பாகவும், சத்துணவு மற்றும் கிராமப்புறப் பணியாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்காகவும் சங்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும். உழைத்த மக்களுக்கு முதுமைக் காலத்தில் சமூக மரியாதையுடன் கூடிய பாதுகாப்பு அவசியம். ஓய்வூதியம் என்பது அவர்களின் கண்ணியமான வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும்” என்று பேசினார். விழாவின் நிறைவில் கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'அதிகாரிகள் மட்டத்தில் கோரிக்கைகள் தடுக்கப்படுகின்றன': கோவை கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசிய த.வெ.க. செய்தித் தொடர்பாளர்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk