ஒவ்வொரு படகிலும், 6 வீரர்கள் காற்றை நம்பி கடலை பந்தயக் களமாக மாற்றினர். ஜல்லிக்கட்டை ஒத்த இந்த வீரப்போட்டிக்கு ‘மண்டாடி’ திரைப்படத்துக்குப் பின் மக்கள் கவனம் அதிகரித்ததாக மீனவர்கள் நன்றியுடன் கூறினர். கடல் அலைகள் சீற... காற்று வேகம் அதிகரிக்க... ஒன்றையொன்று முந்திச் செல்லும் பாய்மரப் படகுகள்... பாய்மரத்தை காற்றின் திசைக்கேற்ப திருப்பி, கடலையே பந்தயக் களமாக மாற்றிய மீனவர்களின் வீரப்போட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி வெகுவிமரிசையாக நடந்தது. பத்து நாட்டிகல் மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 26 படகுகள் பங்கேற்றன. ஒவ்வொரு படகிலும் 6 வீரர்கள் களமிறங்கி காற்றின் வேகத்தோடு போட்டியிட்டனர். ஜல்லிக்கட்டை போல் மீனவர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் போட்டி இது. மண்டாடி திரைப்படத்துக்குப் பிறகு மக்கள் கவனம் பாய்மரப் படகு போட்டி மீது திரும்பியுள்ளது. இதற்காக படக்குழுவினருக்கு மண்டாடிகள் நன்றி தெரிவித்தனர். காலம் மாறினாலும்... தொழில்நுட்பம் வளர்ந்தாலும்... காற்றை நம்பி கடலை வெல்லும் இந்த மீனவர்களின் வீர பாரம்பரியம் மட்டும் தலைமுறை கடந்து பயணிக்கிறது.
ராமநாதபுரம் | காற்றைக் கிழித்துச் செல்லும் படகுகள்.. மண்டாடி படத்திற்குப் பின் கிடைத்த கவனம்!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk