கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர் பெருமக்கள் நினைவஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். கரூர் துயர சம்பவம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “கரூர் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. கரூர் துயரச் சம்பவத்தில் நம்மை விட்டு பிரிந்த 41 உயிர்களின் இழப்பு என்றும் ஆறாத எங்களின் வாழ்நாள் துயரம். அவர்களோடு பல கனவுகளும், எதிர்பார்ப்புகளும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் உலகமும் போய்விட்டது. அன்று ஏற்பட்ட அந்த துயரம், எங்கள் நெஞ்சில் என்றும் நீங்காத வலி. நம்மை விட்டு பிரிந்த அந்த 41 உயிர்களின் நினைவுகள் என்றும் எங்களுடன் வாழும். அவர்களை என்றும் மறக்கமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். “அரிசி விலை உயுர்வு: ஆந்திராவைப் போல் கிலோ ரூ.50-க்கு ரேஷன் கடைகளில் அரிசி விற்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல் “வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!” – அன்புமணி சி.பா. ஆதித்தனார் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்! சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் புகழாரம்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
கரூர் துயரம்: அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk