கவுகாத்தி: அசாமில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தன்னார்வலர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இருப்பினும், கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை அடையாளம் தெரியா இடத்திற்கு போலீசார் அழைத்து செல்வதாக CJP நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்திற்கு பிறகு நாடு முழுக்க பல்வேறு விஷயங்களில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குரல் கொடுத்து வருகிறது. மேலும், நாடு முழுக்க தங்கள் அமைப்பை விரிவுபடுத்தவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து பல்வேறு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். அதன்படி இன்றைய தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதல் பிராந்திய தன்னார்வலர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இதில் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை முதலே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தான் கூட்டம் தொடங்க சற்று நேரம் மட்டுமே இருந்த போது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த நடவடிக்கைக்கு கரப்பான் பூச்சி ஜனதா நிறுவனர் அபிஜீத் திப்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகளை போலீஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும் அவர்களை அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்து செல்லப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டம் தொடங்கும் முன்பே உள்ளே புகுந்த போலீஸ்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk