மீண்டும் பாண்டியாவிற்கு காயம்.. கடுப்பான கவுதம் கம்பீர்! அரைகுறை வீரர் தேவையில்லை!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️
மீண்டும் பாண்டியாவிற்கு காயம்.. கடுப்பான கவுதம் கம்பீர்! அரைகுறை வீரர் தேவையில்லை!

இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவுக்குப் பிறகு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பற்றாக்குறை நீடிக்க, ஹர்திக் பாண்டியா ஒரே நம்பிக்கையாக உருவெடுத்தார். ஆனால் தொடர்ச்சியான காயங்கள் காரணமாக 2023 உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் போன்ற முக்கிய வாய்ப்புகளை இழந்துள்ளார். 2027 உலகக்கோப்பை முன்னே, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அரைகுறைத் தயாரிப்புடன் ஹர்திக், பும்ரா போன்றோருக்கு இடமில்லை என எச்சரிக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கான பஞ்சம் இன்றுவரை தீராமலே இருந்துவருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தாலும் கூட, அதற்கான விடையை இன்றுவரை இந்திய அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட்டிலேயே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் பட்டியல் என எடுத்துக்கொண்டால், அதில் ‘கபில்தேவ்’ என்ற ஒருபெயர் மட்டுமே இன்றுவரை இருக்கிறது. அவர் ஓய்வுபெற்று 32 ஆண்டுகள் ஆனபிறகும், இந்திய அணிக்கு அவரைப்போன்ற ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இன்னமும் கிடைக்கவில்லை. அவருக்கு பிறகு இந்தியாவிற்கு கிடைத்தது ஹர்திக் பாண்டியா மட்டுமே. 140 கிமீ வேகத்தில் பந்துவீசுவதோடு, ஆட்டத்தையே மாற்றக்கூடிய பேட்டிங்கையும் வெளிப்படுத்தும் வீரர் என்பதால், நீண்ட கால தேடலின் விடையாக ஹர்திக் பாண்டியா கிடைத்தார். ஆனால் அடிக்கடி காயம் அடையக்கூடிய வீரராக ஹர்திக் இருப்பதால் இந்திய அணிக்கு அது தொடர்ந்து பின்னடைவாகவே இருந்துவருகிறது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போது காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா, இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை. அதைத்தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் ஒருநாள் வடிவத்திற்கு தான் அவரால் திரும்ப முடிந்தது. அப்போதிலிருந்து இப்போதுவரை ஒருநாள் வடிவத்திற்கு திரும்பாத ஹர்திக், தற்போதும் ஃபிட்னஸ் இல்லாமல் தான் இருந்துவருகிறார். இதற்கிடையில் 2024 டி20 உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, 2027 உலகக்கோப்பையில் இந்தியா எதிர்பார்க்கும் முக்கிய வீரராக இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவர் இணையமாட்டார் என்றாலும், அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஹர்திக்கிற்கு புதிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தசூழலில் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கியமான வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போவது குறித்து பேசியிருக்கும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், "உலகக் கோப்பைக்குள் அரைகுறைத் தயாரிப்புடன் செல்ல முடியாது. அது ஹர்திக் பாண்டியா ஆகட்டும், ஜஸ்பிரித் பும்ரா ஆகட்டும், அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்காவில் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். ஹர்திக்கைப் போல, பத்து ஓவர்கள் பந்துவீசி, 6 அல்லது 7-வது இடத்தில் களமிறங்கி அவ்வளவு தாக்கத்துடன் ரன்களைக் குவிக்கக்கூடிய வீரர்கள் மிகச் சிலரே உள்ளனர். ஆனால் அனைத்தும் இருந்தாலும் உலகக்கோப்பை அணியில் சரியான தயாரிப்பு இல்லாமல் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, எங்களின் கவனம், குறிப்பாக ஹர்திக்கின் மீதே உள்ளது. அவருக்கு விளையாடும் நேரம் தேவைப்படுகிறது. அதைப்பொறுத்தே முடிவு எடுக்கப்படும்” என கூறியுள்ளார். கம்பீர் உடற்தகுதி மற்றும் அனுபவம் இரண்டையும் உலகக்கோப்பைக்கு எதிர்பார்ப்பதால், ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணிக்கு திரும்பவேண்டும். இல்லையென்றால் இதுவே அவருக்கான கடைசி உலகக்கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை