பிக்பாஸ் நிகழ்ச்சி 15 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியாளர் முனியம்மா செய்வது குறித்து ஹவுஸ் மேட்ஸ் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆனாலும், இந்த சீசன் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. அதில் நிகழ்ச்சி தொடங்கிய 3-வது நாளே பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக காமன் மேனில் இருந்து மணிவண்ணன் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். புத்தகம் படிச்சா காசா? 15 நிமிஷத்துல அக்கவுண்டில் பணமழை கொட்டும்; இந்த நாட்டோட ஆஃபர் தான் இது இதையடுத்து இரண்டாவது வாரத்தில் ஆனந்தி வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் மக்கள் யாருக்கு குறைவான வாக்குகளை அளிக்கிறார்களோ அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார். ஆனால் இந்த சீசனில் புதுவிதமாக, வீட்டின் கேப்டனாக இருப்பவர், டாஸ்கில் சரியாக பர்ஃபார்ம் செய்யாத மூவரை தேர்வு செய்வார். அவர்களில் யார் வெளியேற வேண்டும் என சக போட்டியாளர்கள் ஓட்டிங் செய்து, அதில் யாருக்கு அதிக வாக்குகள் வருகிறதோ அவர் எலிமினேட் செய்யப்படுவார். அப்படி முதாலில் சாவின்யா எலிமினேட் செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை நடந்த எபிசோடில், வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் வாக்களிக்கப்பட்டு ஜாவித் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்கள் அளித்த வாக்கு அடிப்படையில் மணிவண்ணன் வெளியேறி உள்ளார். இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அவினாஷ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. #BiggBossTamil10#BiggBossTamil#Shathiga Valid Point 🔥🔥🔥#Muniyammal Akka ku Channel Side lanthu Periya Support iruku nu kandu pidichita #Shathiga 🔥Beauty with Brainy nu Summa Sollala..💯#BiggBoss10Tamil#BBTamil10pic.twitter.com/CfAev3Tkt5 அதாவது, ஷாதிகா சக ஹவுஸ்மேட்ஸ் உடன் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முனியம்மா அக்காவை ஏன் இவ்வளவு லீனியண்ட்டாக விடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று ஷாதிகா கூறுகிறார். அதற்கு அவினாஷ் அது மக்கள் தேர்வு என்றதும் நாமும் அப்படி செய்யலாமா? என்று ஷாதிகா கேள்வி எழுப்புகிறார். இதற்கு நெட்டிசன்கள் விஜய் டி.வி, முனியம்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதனால் ஷாதிகா காண்டில் உள்ளார் என்று கமெண்ட் செய்துள்ளனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
முனியம்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறதா பிக்பாஸ்? கடுப்பான ஷாதிகா; உண்மை இதுதான்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk