சென்னை செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை மைச்சர் ஆதவ அர்ஜுணா, “தமிழ்நாடு காவல்துறையை இயக்கியது டிஜிபி கிடையாது திமுக குடும்பம் தான. அதனால்தான் கடந்த ஆட்சியில் டிஜிபி நியமனம் செய்யவில்லை. உதயநிதியின் நண்பர்கள்தான் SP பணியிட மாற்றங்களை செய்தனர். இப்போது காவல்துறையில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை. திமுக மீது குறை சொல்வது மட்டுமே எங்க நோக்கம் இல்ல, ஒரு வாடகை வீட்டுக்குப் போகும்போது, அந்த வீடு இடிந்து கிடந்தால் ஆம், வீடு இடிந்திருக்கிறது, அதைக் கட்ட வேண்டும் என்று சொல்லித்தான் ஆக வேண்டும். அதே மாதிரி இடித்துவிட்டு சென்றுவிட்டார்கள். அதனால நிர்வாகச் சிக்கல்களை சரி செய்ய கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். அதில் மின்சாரப் பிரச்னை, சட்டம் ஒழுங்கு என எல்லாம் இருக்கிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தலைமையில்க் இருக்கிறவர்கள் மேல் போலி பிரசாரத்தை உருவாக்குவார்கள். அந்தக் கலை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அங்கிருந்து வந்தவன் என்பதால், அதற்கு எப்படி பதில் கூற வேண்டும் என்று எனக்கும் தெரியும். அந்தப் பதில் என்னவென்றால், அனைத்து தேர்தலிலும் அவர்களைத் தோற்கடித்து வீட்டுல்க் உட்கார வைப்பதுதான். இனி எந்த தேர்தல்லயும் அவர்கள் வெற்றிபெற முடியாது கடந்த 5 ஆண்டுகளாக மின்சார உற்பத்தி செய்யவில்லை. ஆனால் தேவை மட்டும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மழை குறைந்ததால் தண்ணீரில் இருந்து கிடைகும் மின்சாரமும் குறைந்திருக்கிறது. காற்றும் நின்றுவிட்டது, இப்படி வானிலை மாற்றங்களால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் வெளியில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை வருகிறது. 1994-க்குப் பிறகு, தமிழக விளையாட்டில் எந்தவொரு உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் நாம் காணவில்லை. கடந்த நூறு ஆண்டுகளாக, ஒலிம்பிக்கில் தமிழகம் எந்தப் பதக்கமும் வென்றதில்லை. நம்மிடம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் இல்லாததாலும், நமது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மகன்களும் மகள்களும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதாலும்… ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒரு நல்ல நோக்கத்திற்காக, ஒரு சிறந்த விளையாட்டுச் சூழலை உருவாக்க, நமது முதல்வர், நமது விஜய் அண்ணா, நடிகர் அஜித் குமாருடன் இணைந்து, நமக்கு ஒரு ஒலிம்பிக் நகரத்தையும், ஒரு மோட்டார் நகரத்தையும் வழங்க உழைத்து வருகிறார். அதற்காகத்தான் நாங்கள் சென்றோம். அதற்காகத்தான் எங்கள் தலைவர் பங்கேற்றார். ஆனால் திமுக விமர்சகர்கள் [எதிர்க்கிறார்கள்]. இல்லை” என்கிறார். பிரச்சினை என்னவென்றால், தேர்தலுக்கு முன்பும் நாங்கள் விமர்சனங்களை எதிர்கொண்டோம்.” என்றார். தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கவிழா : மதுரைக்கு மாற்றப்பட்டதாக தகவல்? மாற்றுக் கட்சியில் சேர்ந்ததால் ஊரை விட்டு தள்ளி வைப்பு: நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் CSK-வின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்! இரவு 9 மணி வரை 19 மாவட்டங்களில் மழை! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“மின்வெட்டுக்கு காரணம் காத்து, மழை, வானிலைதான்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk