தருமபுரி பகுதியில் 2019ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது முதியவருக்கு தற்போது தண்டனை நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி பகுதியை சேர்ந்த காரிக்குட்டி(55) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு, அதேப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்ட பிரிவு 3 மற்றும் 4-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் சிறுமிக்கு பாலியலா தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து முதியவர் காரிக்குட்டிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசினா பானு தீர்ப்பளித்தார்.
தருமபுரி| 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 7 ஆண்டுக்கு பின் தண்டனை விதிப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk