சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்து தனது மனைவி முத்தம்மாளின் மீது ஆசிட் ஊற்றி கொடூரம் செய்துள்ளார். 60 வயதான முத்தம்மாள் படுகாயம் அடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மனைவி முத்தம்மாள் (60). ஆறுமுகம் சேகோ ஆலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் முத்தம்மாள் மீது ஆசீட் ஊற்றி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்தம்மாள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்தூர் அருகே கொடூரம்.. குடும்ப தகராறில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்!
📅
📍 Salem, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk