மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் சட்டம்–ஒழுங்கு தொடர்பான தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படை நோக்கமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதாகும். அதேநேரத்தில், தேசிய பாதுகாப்பு, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட தகவல்களுக்கு சட்டத்தின் பிரிவு 8 ஏற்கெனவே விலக்குகளை வழங்குகிறது. எனவே, “சட்டம்–ஒழுங்கு” என்ற பரந்த சொல்லைக் காரணம் காட்டி காவல்துறை தொடர்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்குவது நியாயமானதல்ல. தேவையான இடங்களில் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட விலக்குகளைப் பயன்படுத்த முடியும். காவல்துறையின் செயல்பாடுகள் மக்களின் உயிர், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, பொதுநலன் சார்ந்த தகவல்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். குறிப்பாக, மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகப் பொறுப்புணர்வுக்கு முக்கியமானது. மேலும், ஆர்டிஐ சட்டத்தின் வரம்பைக் குறைக்கும் இந்த நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். தகவல் பெறும் உரிமையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா, தமிழக அரசின் இந்த உத்தரவை ஏற்கிறதா என்பதை அக்கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை என்பது அரசின் சலுகை அல்ல; அது மக்களின் ஜனநாயக உரிமை” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்! “அரிசி விலை உயுர்வு: ஆந்திராவைப் போல் கிலோ ரூ.50-க்கு ரேஷன் கடைகளில் அரிசி விற்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல் கரூர் துயரம்: அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி! “வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!” – அன்புமணி Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk