ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் கண்டறிந்து விரிவான விசாரணை மூலம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவாகியுள்ள நிலையில், கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், புகாரை பெற்ற காவல் துறைக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என அன்றைய ஆளுங்கட்சி தரப்பில் இருந்து யாரெல்லாம் அழுத்தம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு காலகட்டங்களில் சிறுமிகள் அழைக்கப்பட்டு இந்த பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளதால், இது ஒரு மிகப்பெரிய பாலியல் மோசடி சம்பவமாகும். இதில் வீரமணி மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பார் என்று நம்ப முடியாது எனத் தெரிவித்த பெ. சண்முகம் குற்றங்களை மூடி மறைக்க உதவி செய்த காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், வீரமணியுடன் உடந்தையாக இருந்த நபர்கள் என அனைவரும் இந்த வழக்கின் விசாரணை எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, இந்த விவகாரத்திலும் தவறு செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Kalaiyarasi Sundharam S serves as a Sub-Editor at The Indian Express (Tamil). Known for her precision in news editing and a profound understanding of digital media, she has over 4 years of experience in the Tamil media industry. She has established herself as a versatile journalist skilled in news gathering and digital storytelling. Professional Experience and Leadership: Kalaiyarasi has worked with several of Tamil Nadu's leading news organizations: The Indian Express (Tamil): Since joining as a Sub-Editor in November 2024, she has played a key role in delivering accurate and real-time news to digital audiences. Leading Tamil News Outlets: Prior to this, she honed her skills in fast-paced news environments by working with premier organizations such as News7 Tamil, Anandha Vikatan, and Polimer News even during her college years. Expertise and Editorial Philosophy: Kalaiyarasi specializes in simplifying complex topics, particularly in the Food and Health sectors. Her unique strength lies in writing content that is easily accessible to common readers.Her primary areas of interest include: Politics and Society: Monitoring key political shifts and social changes in India and Tamil Nadu. She possesses the skill to translate current political happenings into timely news reports. Food and Health: Providing authoritative insights on food recipes, healthy diets, and medical tips, including investigative articles. Education and Credibility: With a strong academic background, she holds a Master’s degree (P.G.) in Journalism and Mass Communication from the renowned Periyar University. She is deeply passionate about identifying unique perspectives in daily news and popularizing information regarding food and health among Tamil readers. Industry Experience at a Glance: Years of Experience: 4+ Education: Post Graduate (P.G.), Periyar University Previous Organizations: News7 Tamil, Anandha Vikatan, Polimer News. Contact: You can share your feedback at Kalaiyarasi.sundharam@indianexpress.com. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை தேவை: மார்க்சிஸ்ட் சண்முகம் பேட்டி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk