குறைந்தபட்சம் ரூ. 10,000 பென்ஷன்: ரயில்வே ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ Business ✍️
குறைந்தபட்சம் ரூ. 10,000 பென்ஷன்: ரயில்வே ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு

UPS for Railway employees ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்து, என்பிஎஸ் (NPS) திட்டத்தின் கீழ் உள்ள ரயில்வே ஊழியர்கள் யூபிஎஸ் (UPS) திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர். ரயில்வே துறையில் புதிய UPS ஓய்வூதிய விதிமுறைகள் வெளியீடு: முழுமையான வழிகாட்டி (Image: AI) தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ரயில்வே ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் விதிகளை ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை (செப்டம்பர் 23, 2026) வெளியிட்டுள்ளது. இதில் யாரெல்லாம் திட்டத்தில் சேரலாம், ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படும், குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு, விருப்ப ஓய்வு பெற்றால் என்ன கிடைக்கும், மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற முடியுமா என்பது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அறிமுகப்படுத்தியது. தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த ரயில்வே ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்? 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு ரயில்வே பணியில் சேர்ந்த, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள ஊழியர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். எனினும், தற்காலிக அல்லது தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் வேறு ஓய்வூதிய விதிகளின் கீழ் வரும் குறிப்பிட்ட பிரிவினர் இந்தத் திட்டத்தில் சேர முடியாது. ஊழியர் மற்றும் அரசின் பங்களிப்பு விபரங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் ரயில்வே ஊழியர், தனது அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (DA) இருந்து மாதந்தோறும் 10 சதவீதத்தை யூபிஎஸ் கணக்கிற்குச் செலுத்த வேண்டும். ஊழியர் பயிற்சிக் காலத்தில் இருந்தாலும் அல்லது மத்திய, மாநில அரசுத் துறையில் பணிமாற்று அடிப்படையில் பணியாற்றினாலும் இந்தப் பங்களிப்பு தொடரும். இதேபோல், ரயில்வே துறையும் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை வழங்கும். மேலும், பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) விதிமுறைகளின்படி, அரசு கூடுதலாக தோராயமாக 8.5 சதவீதப் பங்களிப்பைச் செலுத்துகிறது. ஓய்வூதியத் தொகை கணக்கீடு மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் முழுமையான ஓய்வூதியம் பெற ஊழியர் 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் முழு ஓய்வூதியமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு ரூ. 10,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சேவை காலம் 10 முதல் 25 ஆண்டுகளுக்குள் இருந்தால், அதற்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் குறைக்கப்படும். அடிப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றுடன் அகவிலை நிவாரணமும் (DR) வழங்கப்படும். ஊழியரின் மறைவுக்குப் பிறகு, ஓய்வு பெறும் தேதியன்று சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட வாழ்க்கைத் துணைக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது முழு ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதமாகும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ரயில்வே ஊழியர்கள் 20 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த பிறகு விருப்ப ஓய்வு (VRS) பெறலாம். ஆனால், விருப்ப ஓய்வு பெற்ற உடனேயே ஓய்வூதியம் வழங்கப்படாது. ஊழியர் தனது இயல்பான ஓய்வு பெறும் வயதை அடையும் தேதியில் இருந்துதான் ஓய்வூதியம் தொடங்கும். வேலையை ராஜினாமா செய்தால் என்ன ஆகும்? ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சாதாரணமாக ராஜினாமா செய்தால், உத்தரவாத ஓய்வூதியம் பெறும் உரிமை ரத்து செய்யப்படும். அந்த ஊழியரின் தனிப்பட்ட ஓய்வூதியக் கணக்கில் சேர்ந்துள்ள தொகை மொத்தமாக வழங்கப்படும். பணிநீக்கம் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவதற்கும் இதே விதி பொருந்தும். கட்டாய ஓய்வு வழங்கப்படும் சூழலில், கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறையாமலும், முழுத் தொகைக்கு மிகாமலும் ஓய்வூதியம் வழங்கப்படும். அதேநேரத்தில், முறையான அனுமதியுடன் மத்திய அரசின் வேறு பணியில் சேருவதற்காக ராஜினாமா செய்தால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் பறிக்கப்படாது. தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மீண்டும் மாற முடியுமா? ரயில்வே ஊழியர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பணிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மாற முடியும். ஆனால் தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிய பிறகு மீண்டும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு திரும்ப முடியாது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்தால், ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 14 சதவீதத்தை அரசு தனது பங்களிப்பாக செலுத்தும். எனினும், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் இந்த மாற்றத்தைச் செய்ய முடியாது. அதேபோல், கருதப்படும் விருப்ப ஓய்வுக்கு முந்தைய 3 மாதங்கள், சில வகையான ராஜினாமா அல்லது கட்டாய ஓய்வு சூழல்கள் மற்றும் துறைரீதியான அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள காலங்களிலும் தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற முடியாது. தனிப்பட்ட நிதி, அளவுகோல் நிதி என்றால் என்ன? ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் தனிப்பட்ட கணக்கில் முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் அதில் கிடைக்கும் வருமானம் சேர்ந்து தனிப்பட்ட நிதி எனக் கருதப்படுகிறது. இதற்கு மாறாக, நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டு முறையில் தொடர்ந்து பங்களிப்புகள் செய்யப்பட்டதாகக் கருதி கணக்கிடப்படும் கற்பனை அடிப்படையிலான தொகை அளவுகோல் நிதி எனப்படுகிறது. ஊழியர் ஓய்வு பெறும் நேரத்தில் அவரது தனிப்பட்ட நிதி, அளவுகோல் நிதியை விடக் குறைவாக இருந்தால், அவருக்குக் கிடைக்கும் உத்தரவாத ஓய்வூதியம் விகிதாசார அடிப்படையில் குறைக்கப்படலாம். இவ்வாறு ஏற்படும் பற்றாக்குறையை, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊழியர் ஈடுசெய்யும் வாய்ப்பும் உள்ளது. ஓய்வில் ஒரே தடவையில் கிடைக்கும் தொகை எவ்வளவு? ஓய்வு பெறும் சமயம் ஊழியர்களுக்கு யூபிஎஸ் திட்டத்தின் கீழ் ஒருமுறை வழங்கும் தொகை (Lump sum) கொடுக்கப்படுகிறது. அதாவது, தகுதி வாய்ந்த ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும் கடைசி பெறப்பட்ட அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10-ல் ஒரு பங்கு வழங்கப்படுகிறது இந்தத் தொகை உத்தரவாத ஓய்வூதியத்துக்கு கூடுதலாக வழங்கப்படும். இதனால் மாதாந்திர ஓய்வூதியம் குறைக்கப்படாது. 60 சதவீதம் வரை தொகையை எடுக்கலாம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெறும்போது, தனிப்பட்ட நிதி அல்லது அளவுகோல் நிதியில் 60 சதவீதம் வரை இறுதியாகத் தொகையைப் பெறும் வசதியும் உள்ளது. ஆனால், தனிப்பட்ட நிதி மற்றும் அளவுகோல் நிதியில் எது குறைவோ, அதில் 60 சதவீதம் வரையிலான தொகையே பெற முடியும். ஊழியர் ஒரே தடவையில் அதிக தொகையை எடுத்துக்கொண்டால், மாதாந்திர உத்தரவாத ஓய்வூதியம் விகிதாசார அடிப்படையில் குறையக்கூடும். எனவே, குறைவான தொகையை இறுதியாக எடுத்துக்கொண்டால், மாதாந்திர ஓய்வூதியம் அதிகமாக இருக்கும். ஊழியர் இறந்தால் என்ன நடக்கும்? ஊழியர் இறக்கும் சூழலில், அவர் தேர்வு செய்த ஓய்வூதிய வாய்ப்பு மற்றும் சம்பந்தப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் வழங்கப்படும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்யாமல், 15 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த பிறகு ஊழியர் இறந்திருந்தால், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குடும்பத்தினருக்கு பொருந்தக்கூடிய ரயில்வே ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கலாம். இதனால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ரயில்வே ஊழியர்கள் தங்களுக்கு பொருந்தும் விதிகளை கவனமாகப் பரிசீலித்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்வதா அல்லது விதிகளுக்கு உட்பட்டு தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதா என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை