SIR சர்ச்சை| ”ஞானேஷ் குமார் அப்ரூவராகி மோடி மீது விசாரணை வேண்டும்..” - ராகுல் காந்தி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
SIR சர்ச்சை| ”ஞானேஷ் குமார் அப்ரூவராகி மோடி மீது விசாரணை வேண்டும்..” - ராகுல் காந்தி!

SIR சர்ச்சை விவகாரத்தில் வாக்குத் திருட்டு நிரூபிக்கப்பட்டது என்றும், ஞானேஷ் குமார் அப்ரூவராகி, மோடி-அமித் ஷா மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்துகிறார். வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து பட்டியலைத் திருத்துவதற்காக Special Intensive Revision எனப்படும் SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படக்கூடும் என்றும், SIR நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக இன்று வெளியான தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது, மீண்டும் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தசூழலில் இவ்விவகாரம் தொடர்பாக பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவரும் ராகுல்காந்தி, வாக்குத்திருட்டு நடந்த்வருவதை நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக கூறிவருகிறேன், தற்போது அது நிரூபனமாகியுள்ளது என்றும், தலைமை தேர்தல் ஆணையர் அப்ரூவராக வேண்டும் என்றும், மோடி மற்றும் அமித்ஷா மீது விசாரணை வேண்டும் என்றும் கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ராகுல் காந்தி, “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி வருகிறேன். இப்போது, ​​தேர்தல் ஆணையர்களே அதை ஒப்புக்கொண்டு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றனர். ஞானேஷ் குமார் தேசத்துரோகம் இழைத்துள்ளார். அவர் உடனடியாகப் பதவி விலகி, அரசுத் தரப்பு சாட்சியாக மாற வேண்டும். வாக்குத் திருட்டுச் சதி தொடர்பாக நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும்” என பதிவிட்டுள்ளார். मैं तीन साल से वोट चोरी का पर्दाफ़ाश करता आ रहा हूँ। अब चुनाव आयुक्त खुद इसे स्वीकार कर सच्चाई उजागर कर रहे हैं।ज्ञानेश कुमार ने देशद्रोह किया है। वो अभी इस्तीफ़ा दें और approver बन जाएं।वोट चोरी की साज़िश में नरेंद्र मोदी और अमित शाह की पूरी जांच होगी। pic.twitter.com/l7K0e1fSua மேலும், “வாக்குரிமையே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். வாக்குரிமையிலிருந்தே நமது அரசியலமைப்பின் ஆற்றல், சட்டங்களின் அதிகாரம் மற்றும் பொது நிறுவனங்களின் சட்டபூர்வத் தன்மை ஆகியவை உருவாகின்றன. இந்தச் சங்கிலித்தொடரே நவீன இந்தியாவை வரையறுக்கிறது. இன்று இந்தச் சங்கிலி உடைக்கப்பட்டுள்ளது; இந்தியாவில் இதற்கு முன் இதுபோன்று ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. வாக்குரிமையைச் சிதைப்பதன் மூலம், இந்த அரசும் தேர்தல் ஆணையமும் ஒவ்வொரு இந்தியரின் கருத்து வெளிப்பாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளன. திருடப்பட்ட வாக்குகளின் பலத்தில் இந்த அரசு செய்துள்ள அனைத்தும் சட்டவிரோதமானவை. 'வாக்குத் திருட்டு' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வகிக்கும் பதவி சட்டவிரோதமானது; அத்தகைய உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் சட்டவிரோதமானதே” என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். The vote is the foundation of Indian democracy. From the vote flows the power of our Constitution, the authority of our laws, and the legitimacy of our public institutions - this chain defines modern India. Today this chain is broken, and this has never happened in India… pic.twitter.com/rUnA4uU8B7

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை