ஆதரவை இழந்த நெதன்யாகு! இஸ்ரேலின் புதிய பிரதமர் ஐசென்கோட்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆதரவை இழந்த நெதன்யாகு! இஸ்ரேலின் புதிய பிரதமர் ஐசென்கோட்?

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூட்டணிக் கட்சியின் ஆதரவை இழந்துள்ளது குறித்து... காடி ஐசென்கோட் - பிரதமர் நெதன்யாகு - AP இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால கூட்டாளியான மரபுவாத யூதக் கட்சி ஒன்று அவர் பிரதமராகத் தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில், கடந்த அக்.27 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சித் தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இதையடுத்து, பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை இதுவரை எந்தவொரு கட்சியும் பெறாத சூழலில், தேர்தல் முடிவுகளை சட்டப்பூர்வமான முடிவுகளாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கடந்த புதன்கிழமை (நவ. 4) அன்று ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அதிபர் ஹெர்சாக் புதிய ஆட்சி அமைப்பது குறித்து வெற்றி பெற்ற கட்சிகளுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில், நெதன்யாகுவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி இம்முறை அவர் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், 7 இடங்களைக் கைப்பற்றியுள்ள அந்தக் கட்சி அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசென்கோட்டிற்கும் இதுவரை ஆதரவளிக்கவில்லை. மரபுவாத யூதர்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி மதப்பற்றுள்ள யூத மாணவர்களுக்கு ராணுவப்பணிக் கட்டாயமாக்கப்பட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. புதிய ஆட்சி அமைக்க 28 நாள்கள் அவகாசம் வழங்கப்படும் சூழலில், மரபுவாத யூதக் கட்சி அல்லது அரபு கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐசென்கோட் பிரதமராகப் பதவியேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில், நெதன்யாகு அரசு குறித்து மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால், ஐசென்கோட்டிற்கு ஆதரவளிக்க கட்சிகள் முன்வரக் கூடும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை